பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 245

பக்கங்கள் ஆகிய; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்-எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். தங்கு-தங்கிக கொண்டிருக்கும். புள்-பலவகையாகிய பறவைகள் : ஒருமை பன்மை மயக்கம், ஒலி-கூவும் ச த் த ங் க ள்: ஒருமை பன்மை மயக்கம், வாழ்த்துரை-தம்மை வாழ்த்தும் வாழ்த்துக்களை ஒருமை பன்மை மயக்கம். எடுத்துஎடுத்துக் கூற முன்-தமக்கு முன்னால் உள்ள. புனல்-நீர் நிரம்பிய பொய்கை-பொய்கையில்; மனிதர் ஆக்காத நீர் நிலை. தாமரை-வளர்ந்திருக்கும் செந்தாமரை மலர்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். மது-தேனினுடைய. வாச-நறுமணம், ப்:சந்தி, பொங்கு-பொங்கி எழும். செம்சிவப்பாக இருக்கும். முகை-அரும்புகளாகிய ஒரும்ை பன்மை மயக்கம். கரம்-கைகளை ஒருமை பன்மை மயக்கம். குவித்து-கூப்பிக் கும் பிட்டு. அலர்-மலர்ச்சியைப் பெற்ற, முகம்-முகத்தை. காட்டின-தோற்றுமாறு செய்தன. அந்தச் செந்தாமரை மலர்கள். செந்தாமரை மலர்கள் : தோன்றா எழுவாய்.

பிறகு வரும் 149-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத் திற்கு எழுந்தருளும் சமயத்தில் தோகைகளைப் பெற்ற மயிற் கூட்டம் களிப்பைப் பெற்றுத் தம்மை வரவேற்று அழைக்க, மிக்க நறுமணம் கமழும் குளிர்ச்சியைப் பெற்ற தென்றற் காற்று வந்து உலாவித் தமக்கு முன்னால் தம்மை வணங்கி எதிர் கொண்டு வரவேற்க, கிளர்ச்சியை அடைந்து மேலே பறந்து எழுந்து தம்மோடு வரும் வண்டுகள் ரீங்காரம் செய்ய மரங்களில் விளங்கும் சிவந்த தளிர்களினுடைய பிர காசத்தைப் பெற்ற நிறம் பொலிய இரண்டு மகரக்குழை களும் தம்முடைய திருச்செவிகளினுடைய பக்கங்களில் அசைந்து ஆட, செந்தாமரை மலரைப் போன்ற தம்முடைய திருமுகம் விளங்கி அசைய, மென்மையான மரக்கிளைகள் பல வகையான மலர்கள் மலர்ந்திருக்கும் மரங்கள் ஓங்கி,