பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fr

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 34?

றப் பொலிவை அடைந்து, அசைய-அசைந்திருக்க. மென்மென்மையான, கொம்பர்-மரக்கிளைகள்: ஒருமை பன்மை மயக்கம். மலர்-பல வகையான மலர்கள் மலர்ந்திருக்கும்: ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி, சோலை-பூம்பொழிலில், நின்று.நின்று கொண்டு. ஆடும்-அந்த மயில்கள் நடனமாடு பவைகளாக விளங்கும்.

பின்பு உள்ள 150-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'அணிகலன்களை அணிந்து கொண்டிருக்கும் விசால ம்ான கொங்கைகளைப் பெற்ற இமய மலை அரசனுடைய பெருமையைப் பெற்று விளங்கும் புதல்வியும், பூங்கொடி யைப் போன்றவளும் ஆகிய பெரிய நாயகி இனிய சுவையை பெற்ற அமிர்தம் என்று கூறுமாறு சிவஞானத்தை ஒரு பெர்ற் கிண்ணத்தில் வைத்துக் குழைத்து வழங்கியருள அந்தச் சிவஞானப் பாலைத் திருவமுது செய்தருளிய குழந் தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத்திற்கு எழுந்தருள அதைப் பார்த்து மழையைப் போலக் குளிர்ச்சியைப் பெற்ற மந்தமாருதமாகிய தென்றற் காற்றினால் நறுமணம் கமழும் மலர்களில் உள்ள மஞ்சள் நிறத்தைக் கொண்ட நுட்பமாக உள்ள மகரந்தப் பொடி களை எந்த இடத்திலும் தூவி தழைத்து எழுந்த பொங்கி வரும் அழகைப் பெற்ற முகங்களைக் காட்டி விசாலமான பெருத்த வயல்களில் விளைந்து நிற்கும் நெற் கதிர்கள் அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பணிந்தன. பாடல் வருமாறு:

இழைத்த டம்கொங்கை இமயமா மலைக்கொடி

இன்னமுதென ஞானம் குழைத்த ளித்திட அமுதுசெய் தருளிய

குருளையார் வரக்கண்டு - மழைத்த மந்தமா ருதத்தினால் நறுமலர்

வண்ண நுண் துகள்துவித் தழைத்த பொங்கெழில் முகம்செய்து வணங்கின

தடம்பனை வயற்சாலி.'