பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 25?

புகையினுடைய பரப்பினால் தவம் தழைக்குமாறு சீகாழியில்

திருவவதாரம் செய்து வந்தருளிய ஆளுடைய பிள்ளை யாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத் திற்கு எழுந்தருளி அடைய அவருக்கு முன்னால் மேலே உயர்ந்த நீல நிற்த்தைப் பெற்ற நுட்பமான மெல்லிய ஆடையை மேற்கட்டியாகக் கட்டியதைப்போல் உயர்ந்த ஆகாயம் விளங்கியது. பாடல் வருமாறு:

'பவங்த விர்ப்பவர் தில்லைசூழ் எல்லையில்

மறையவர் பயில் வேள்விச்

சிவந்த ரும்பயன் உடைய ஆ குதிகளின்

செழும்புகைப் பரப்பாலே

தவக் த ழைப்பவங் தருளிய பிள்ளையார்

தாமணை வுறமுன்னே

கிவந்த நீலதுண் துகில்வி தானித்தது

போன்றது கெடுவானம்.'

பவம்-பிறப்பை தவிர்ப்பவர்-போக்கியருள்பவராகிய தடராஜப் பெருமானார். தி ல் ைல-தி ரு க் கோ யி ல் கொண்டு எழுந்தருளியிருக்கும் தில்லையாகிய சிதம்பரத்தை , சூழ். சுற்றியுள்ள. எல்லையில் மறையவர்-எல்லையில் மூவாயிரம் பேர்களும்; ஒருமை பன்மை மயக்கம். பயில்புரியும். வேள்வி-யாகங்களில்; ஒருமை பன்மை மயக்கம். ச்:சந்தி. சிவம்-சிவபெருமானை. தரும்-வழங்கும். பயன்பிரயோசனத்தை. உடைய-பெற்ற, ஆகுதிகளின்-நெய், சமித்துக்கள், சுத்தான்னம், அட்சதை, பால் முதலிய ஆகுதிகளை. செழும்-யாகத்தீயில் சொரிந்ததனால் எழுந்த செழுமையைப் பெற்ற. புகைப்பரப்பால்-புகையினுடைய பரப்பினால். ஏ. அசைநிலை. தவம் தழைப்ப-தவசிகள் புரியும் தவம் தழைத்து ஓங்குமாறு. வந்தருளிய-சீகாழியில் திருவவதாரம் செய்து வந்தருளிய. பிள்ளையார்தாம்ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தாம்: அசைநிலை. அணைவுற-சிதம்பரத்திற்கு எழுந்தருளி அடைய. முன்-அவருக்கு முன்னால், ர, அ ை