பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 255'.

பெருமானாருடைய பக்தர்களோடு. ஒண்டி-வந்து சேர்ந்து எங்கும்-எல்லா இடங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். மங்கல-மங்கலகரமாகிய அணி-அலங்காரங்கள்ை: ஒருமை பன்மை மயக்கம். மிக-மிகுதியாக. அலங்கரித்து-அலங்காரம் புரிந்து. எதிர்கொள-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை எதிர்கொண்டு வரவேற்பதற்காக. கொள:இடைக்குறை. அணை வார்கள்-அவர்கள் அடைபவர்கள். ஆனார்கள்.

அடுத்து வரும் 155-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'சிதம்பரத்தில் வாழும் தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் ஒதும் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களினுடைய இனிய கானமும், மங்கல வாத்தியங்களை அவற்றை வைத்திருப்பவர்கள் வாசிக்கும் பேரொலியும், ஆகாயத்தில் நிரம்பி ஓங்கி எழ, குளிர்ச்சியைப் பெற்ற நறு மணம் கமழும் புனல் நிரம்பிய பூர்ண கும்பங்களையும், திரு விளக்குக்களையும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத்திசைகள் எல்லாவற்றிலும் நிரம்பி அமைய ஒளி வெள் ளத்தை வீசும் டெருமையைப் பெற்று விளங்கும் அழகிய திருக்கோயிலினுடைய கோபுர வாசலுக்கு வெளியில் போய் சோபனத்தை உண்டாக்கும் வார்த்தைகளையும் கூறி ஒரு குற்றமும் இல்லாதவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை எதிர் கொண்டு வரவேற்று அவரை அழைத்துக் கொண்டு சித்ம்பரத்துக்குள் நுழைந்தார்கள். பாடல் வருமாறு:

  • வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை கிறைந்தோங்கச் சீத வாசர்ே கிறைகுடம் தீபங்கள்

திசைளலாம் நிறைந்தாரச்