பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。笼5窃 பெரிய புராண விளக்கம்10

சோதி மாமணி வாயிலின் புறம்சென்று சோபன ஆக்கமும்சொல்லிக்

கோதி லாதவர் ஞானசம் பந்தரை

எதிர்கொண்டு கொடுபுக்கார்.'

வேத.சிதம்பரத்தில் வாழும் தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் ஒதும் இருக்கு வேதம், யஜுர் வுேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். நாதமும்இனிய கானமும். மங்கல-மங்கல வாத்தியங்களை ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: நாகசுரம், ஒத்து, மத்தளம், கஞ்சதாளங்கள், முகவீணை, வீணை, யாழ், தம்புரா, முரசு, பேரிகை, தபேலா, உடுக்கு புல்லாங்குழல், சல்லரி, கரடிகை முதலியவை. முழக்கமும்-அவற்றை வைத் திருப்பவர்கள் வாசிக்கும் பேரொலியும். விசும்பிடை-ஆகா பத்தில், நிறைந்து-நிரம்பி, ஒங்க-ஓங்கி எழ. ச்சந்தி. சீதகுளிர்ச்சியைப் பெற்ற, வாச-நறுமணம் கமழும். நீர்-புனல். நிறை-நிரப்பிய. குடம்-பூரண கும்பங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். தீபங்கள்-திருவிளக்குக்களையும் ஏற்றி வைத்து. திசை-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வட கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளின் ஒருமை பன்மை மயக்கம். எலாம்எல்லாவற்றிலும் இடைக்குறை. நிறைந்து-திரம்பி. ஆரஅமைய, ச்:சந்தி. சோதி-ஒளி வெள்ளத்தை வீசும். மாபெருமையைப் பெற்று விளங்கும். மணி-அழகிய சிறிய கணிகளைக் கட்டியிருக்கும்’ எனலும் ஆம்; ஒருமை பன்மை மயக்கம், வாயிலின்-திருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும் கோபுர வாசலுக்கு. புறம்-வெளியில். சென்றுபோய். சோபன-சோபனத்தை மங்கலத்தை. ஆக்கமும்உண்டாக்கும வார்த்தைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். சொல்லி-கூறி. க்:சந்தி. கோது-ஒரு குற்றமும். இலாதவர். இல்லாதவராகிய, இடைக்குறை. ஞான சம்பந் தரை-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை. எதிர்