பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பெரிய புராண விளக்கம்-10

‘அடியேங்களுடைய தலைவனாகிய நந்திதேவன் முதலாக உள்ள சிவகணங்களுக்குத் தலைவர்கள் பல வகை யான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பல தடவைகள் சிதம்பரத்தை வந்து அடைய முடிவு இல்லாத புகழைப் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் நடராஜப் பெருமானாரைச் சமீபித்து அவருடைய சந்நிதியில் அவரை வணங்கி விட்டு அழகிய திருவணுக் களாகும் அழகிய வாசலில் தம்முடைய திருவுள்ளத்தில் பேராவலும் பெருகி எழத் தம்முடைய தலையின்மேல் தம்முடைய சிறியவையாகிய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்து விளங்கும் கைகள் ஏறக் கும்பிட்டு, உஜ் ஜீவனத்தை அடைந்து மகிழ்ச்சியை அடையும் தம்முடைய அழகிய விழிகள் மகிழ்ச்சியை அடைய உருக்கத்தை அடையும் - பக்தியோடு அந்த நாயனார் திருக்கோயிலுக்குள் நுழிைந்: தார். பாடல் வருமாறு:

' கங்தி எம்பிரான் முதற்கண நாதர்கள்

நலம் கொள்பன் முறைகூட

அந்தம் இல்லவர் அணுகிமுன் தொழுதிரு

அணுக்களாம் திருவாயில்

சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியிற்

சிறியசெங் கையேற

உய்ந்து வாழ் திரு நயனங்கள் களிகொள்ள

உருகுமன் பொடுபுக்கார்.'

நந்தி எம்பிரான்-அடியேங்களுடைய தலைவனாகிய நந்திதேவன். ‘அடியேங்கள்’ என்றது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. முதல்-முதலாக உள்ள. கண-சிவகணங்களுக்கு : ஒருமை பன்மை மயக்கம். நாதர்கள்-தலைவர்கள். நலம்-பலவகையான நன்மைகளை, ஒருமை பன்மை மயக்கம். அந்த நன்மைகளாவன : சிவபெரு, மானை மறவாமல் வணங்குதல், சிவனடியார்களை உபசரித்து விருந்துணவைப் படைத்தல் முதலியவை. கொள்: பெற்றுக் கொள்ளும் பொருட்டு, பன்முறை-பல தடவைகள்: