பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

திருஞான சம்ாந்த மூர்த்தி நாயனார் புராணம் 26፰

ஒருமை பன்மை மயக்கம். கூட-சிதம்பரத்தை வந்து அடைய. அந்தம்-முடிவு. இல்லவர்-இல்லாத புகழைப் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். அணுகி-சமீபித்து, முன்-அந்த நடராஜப் பெருமானாருடைய சந்நிதியில். தொழு-அந்தப் பெருயர்னாரை வணங்கி விட்டு. திரு. அழகிய. அணுக்களாம்-திருவணுக்களாகும். திரு.அழகிய, வாயில்-வாசலில். என்றது திருக்களிற்றுப் படிகள் உள்ள வாசலில் என்றபடி, சிந்தை-தம்முடைய திருவுள்ளத்தில். ஆர்வமும்-பேராவலும். பெருகிட-பெருகி எழ. ச்சந்தி. சென் னியில்-தம்முடைய தலையின்மேல். சிறிய தம்முடைய சிறியவையாகிய பெயர்.செங்கை-செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்து விளங்கும் கைகள்; ஒருமை பன்மை மயக்கம், ஏற-ஏறக் கும்பிட்டு. உய்ந்து-உஜ்ஜீவனத்தை அடைந்து.

வாழ்-மகிழ்ச்சியை அடையும். திரு-அழகிய நயனங்கள்

தம்முடைய விழிகள். களி-மகிழ்ச்சியை. கொள்ள-அடைய. உருகும்-உருக்கத்தை அடையும். அன்பொடு-பக்தியோடு. புக்கார்-அந்த நாயனார் திருக்கோயிலுக்குள் நுழைந்தார்.

பின்பு உள்ள 160-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

சமுத்திரக் கரையில் உள்ள சீகாழியில் திருவவதாரம்

செய்தருளிய புண்ணியச் செயல்களினுடைய கொழுந்தைப்

போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய தலைவரும். சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின்மேல் வீற்றிருந்தருளு பவரும் ஆகிய தோணியப்பர் தமக்கு வழங்கியருளிய உண்மையான சிவஞானமே ஆகிய திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் முத்தைப் போன்றவராகிய நடராஜப் பெருமானார் தம்முடைய திருவுள்ளத்தில் நிறைந்துள்ள சிவஞானத்தினால் பொங்கி எழும் ஆனந்தத் தாண்டவ மாகிய ஒப்பற்ற பெருமையைப் பெற்று விளங்கும் ஒப்பற்ற திருநடனத்தையும் தம்முடைய கண்களுக்கு முன்னால் அடையுமாறு தரிசித்துத் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தம்முடைய