பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗64 பெரிய புராண விளக்கம்-10

கைகளைத் தம்முடைய தலையின் மேல்வைத்துக் கும்பிட்டு விட்டு பரிசுத்தராகிய நடராஜப் பெருமானார் திருநடனம் புரிந்தருளிய தோற்றப் பொலிவை தம்முடைய திருவுள் ளத்தில் பொங்கி எழும் மகிழ்ச்சியோடும் வாழ்த் தி வணங்கு பவரானார் அந்த நாயனார். பாடல் வருமாறு:

' அண்ண லார் தமக் களித்தமெய்ஞ் ஞானமே

ஆனஅம் பலமுத்தம் உண்ணி கூறந்தஞா எத்தெழும் ஆனந்த

ஒருபெருங் தனிக்கூத்தும் கண்ணின் முன்புறக் கண்டுகும் பிட்டெழும்

களிப்பொடும் கடற்காழிப் புண்ணி யக் கொழுந் தனையவர் போற்றுவார்

புனிதர்ஆ டியபொற்பு.'

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. கடல்-சமுத்திரக் கரையில் உள்ள. காழி-சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய. ப்:சந்தி, புண்ணிய-புண்ணியச் செயல்களினுடைய: ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி, கொழுந்து-.ெ கா மு ந் ைத. அனையவர்-போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். அண்ணலார் தம்முடைய தலைவரும் சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின் மேல் வீற்றிருந்தருளு பவரும் ஆகிய தோணியப்பர். தமக்கு அளித்த-தமக்கு வழங்கியருளிய. மெய்-உண்மையான. ஞ்.சந்தி. ஞானமே ஆன.சிவஞானமே ல டி வ மா கி ய. அம்பல-திருச்சிற்றம் பலத்தில் எழுந்தருளியிருக்கும். முத்தம்-முத்தைப் போன்ற வராகிய நடராஜப் பெருமானார்: உவம ஆகுபெயர். உள்தம்முடைய தி ரு வு ள் ள த் தி ல், நிறைந்த-நிரம்பியுள்ள. ஞானத்து-சிவஞானத்தினால். எழும்-பொங்கி எழும். ஆனந்த-ஆனந்தத் தாண்டவமாகிய, ஒரு-ஒப்பற்ற, பெருமபெருமையைப் பெற்று விளங்கும். தனி-நிகரற்ற க்:சந்தி. கூத்தும்-திருநடனத்தையும். கண்ணில்-தம்முடைய கண் களுக்கு; உருபு மயக்கம். முன்பு-முன்னால், உற-அடையு