பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 265

மாறு: க்:சந்தி. கண்டு-தரிசித்து. கும்பிட்டு-தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தயமுடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்து அந்த நடராஜப் பெருமானாரைக் கும்பிட்டு விட்டு. புனிதர்-பரிசுத்தராகிய நடராஜப் பெருமானார். ஆடிய-திருநடனம் புரி ந் த ரு ளி ய. பொற்பு-தோற்றப் பொலிவை. எழும்-தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழும். களிப்பொடும்-மகிழ்ச்சியோடும். போற்றுவார்.அந்த நாயனார் வாழ்த்தி வணங்குபவரானார்.

சிவபெருமானுக்கு முத்து உவமை: 'முத்தினை முழு வயிரத்திரள் மாணிக்கத் தொத்தினை. என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும்,'புறம் பயத்தெம் முத்தினை.", 'முத்தினை மணியைப் பொன்னை.', 'முத்தின் திரளும். ஏய்க்கும் படியாய்.', 'முத்தினைப் பவளத்தை முளைத்த வெம் தொத்தினை.", ஆமாத்தூர்மேவிய முத்தினை.', 'முத்தினை முதலாகிய மூர்த்தியை.’’, முத்தினை மணி யைப் பவளத்தொளிர் தொத்தினை.', 'முத்தொப்பானை முளைத்தெழு கற்பக வித்தொப்பானை', 'பவளத்தைப் பசும் பொன் முத்தை.', முத்தினை மணி தன்னை மாணிக்கத்தை.', செம்பொன்னைப் பவளத்தைத் திரளும் முத்தை ', 'செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தை : "வான் பவளக் கொழுந்தை முத்தை.', 'தோளாத முத் தொப்பானை', 'முத்தினை என் மணியை மாணிக் கத்தை.','செம்பொன்னை தனிபவளம் திகழும் முத்தை.". "பொன்னாகி மணியாகி முத்துமாகி.', 'உத்தமனை நித்தி வத்தை...நித்திலத்தின் தொத்தொப்பானை.', 'அம்பொற் குன்றத்தை முத்தின் துணை.', 'இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'முத்தினை மனிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த வித்தனே.', 'பொன்னே நன்மணியே வெண்முத்தே., 'அருமணியை முத்தினை.', 'முத்தினை மாமணி தன்னை வயிரத்தை.', 'மணியே முத்தே மரகதமே." என்று சுந்தர