பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 268 பெரிய புராண விளக்கம்-10

பிறகு வரும் 162-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: ‘சர்வப் பிரளயகாலத்தைப் புரியும் முதல்வராகிய நடராஜப் பெருமானாருக்கு உரிய பூசை முதலிய பணிகளை ஆற்றும் சிறப்பினால் அழகிய தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களையும் முன்னால் வைத்து அடியேங்களை ஆட்சி புரிந்தருளுபவரும், சீகாழியில் வாழும் அந்தணர் களுக்கு அரசருமாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ச, ரி, க, ம, ப, த, நிச என்னும் ஏழு சுவரங்களைப் பெற்ற இசைப் பாடல்கள் அமைந்த ஒரு திருப்பதிகம் ஓங்கி எ9, 'கற்றாங்கெரி யோம்பி' என்று தொடங்கி அந்த நாயனார் பாடியருளினார். பாடல் வருமாறு:

ஊழிமுதல் வர்க்குரிமைத் தொழில் சிறப்பால் வாழிதிருத் தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தே ஏழிசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் கழியர் தம் காவலனார், கற்றாங்கெரி யோம் பி. ஊழி-சர்வப் பிரளய காலத்தைப் புரிந்தருளும். முதல் வர்க்கு-முதல்வராகிய நடராஜப் பெருமானாருக்கு. உரிமைஉரிய பான்மையைப் பெற்ற பூசை முதலிய. த்:சந்தி. தொழில்-திருப்பணிகளை ஆற்றும்; ஒருமை பன்மை மயக்கம். சிறப்பால்-சிறப்பைப் பெற்ற நிலையினால். வாழி: அசைநிலை. திரு.அழகிய, த், சந்தி. தில்லைவாழ் அந்தணர் =தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களையும். அந்த னர்: ஒருமை பன்மை மயக்கம். முன்வைத்தே-முன்னால் அமைத்து. ஏ: அசைநிலை. ஏழிசையும்-ச, ரி, க, ம, ப, த, நிச எ ன் னு ம் ஏழு சுவரங்களையும் .ெ ப ற் ற இசைப்பாடல்கள் அமைந்த இசை: ஒருமை பன்மை மயக்கம். ஓங்க-ஒரு திருப்பதிகம் ஓங்கி எழ. எமை-அடியேங் களை; இடைக்குறை. இது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. ஆளும்-ஆட்சி புரிந்தருளும், காழியர்தம்-சீகாழியில் வாழும் அந்தணர் களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். தம்:அசைநிலை. காவலனார்.அ ர ச ரா கி ய திருஞான சம்பந்த மூர்த்தி