பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 373

நடராஜப் பெருமானாருடைய திருக்கோயிலில் விளங்கும் திருவருட்செல்வத்தைப் பெற்ற அழகிய முற்றத்தில் தரையில் விழுந்து நடராஜப் பெருமானாரை வணங்கி விட்டுப்பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தேவர்களினுடைய கூட்டம் நிரம்பியிருக்கும் அழகிய கோபுர வாசலுக்கு எழுந் தருளி வந்து மீண்டும் அந்த நடராஜப் பெருமானாரை வணங்கி விட்டுப் பெருமையைப் பெற்று விளங்கும் தவங் களினுடைய பயனை வழங்கும் அழகிய தெருக்கள் நான்குக் கும் எழுந்தருளி மீண்டும் ஒருமுறை அந்த நடராஜப் பெருமானாரை வணங்கி விட்டு அந்தச் சிதம்பரத்தில் தங்கிக் கொண்டிருக்கும் செயலுக்கு அச்சத்தை அந்த நாயனார் அடைவாரானார். பாடல் வருமாறு:

' செல்வத் திருமுன்றில் தாழ்ந்தெழுந்து தேவர்குழாம்

மல்கும் திருவாயில் வந்திறைஞ்சி மாதவங்கள் கல்கும் திருவீதி நான்கும் தொழுதங்கண் அல்கும் திறம் அஞ்சு வார் சண்பை ஆண்டகையார்."

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. சண்பை-சண்பையாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளியவரும்: இடஆகுபெயர். ஆண்டகையார்ஆண்மையையும் தகுதியையும் பெற்றவரும் ஆகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். செல்வ-திருவருட் செல்வத்தைப் பெற்ற த்:சந்தி, திரு.அழகிய. முன்றில்சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானாருடைய திருக் கோயிலில் விளங்கும் முற்றத்தில். முன்றில்-இல்முன்; முன் பின்னாகத் தொக்க தொகை. தாழ்ந்து-தரையில் விழுந்து நடராஜப் பெருமானாரை வணங்கி விட்டு. எழுந்து-பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. தேவர்-தேவர்களி னுடைய ஒருமை பன்மை மயக்கம். குழாம்-கூட்டம். மல்கும்-நிரம்பியிருக்கும். திரு.அழகிய வாயில்-கோபுர வாசலுக்கு வந்து-எழுந்தருளி வந்து. இறைஞ்சி-மீண்டும் அந்த நடராஜப் பெருமானை வணங்கி விட்டு. மா

பெ-10-18