பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பெரிய புராண விளக்கம்-10.

விளங்கும். மறை வெள்ளம்.வேதங்களாகிய வெள்ளம்; மறை:ஒருமை பன்மை மயக்கம். இந்தக் காலத்தில் இருக்கு, வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களே இருந்தாலும், பழங்காலத்தில் பல வேதங்கள் இருந்தன; இதை 'அனந்தாவை வேதா' என்னும் வடமொழி வாக்கியத்தால் உணரலாம். சூழ்ந்துசுற்றி. பரவுகின்ற-துதிக்கின்ற பொன்-தங்கத் தகடுகளால் வேயப் பெற்ற ஆகுபெயர். மாளிகையை-திருக்கோயிலை, வலம் கொண்டு-வலமாக வந்து. புறம்-திருக்கோயிலுக்கு, வெளியில். போந்தார். அந்த நாயனார் எழுந்தருளினார்.

சிதம்பரத்தைப் பற்றித் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் குறிஞ்சிப் பண்ணில் ஒரு திருப்பதிகத்தையும், காந்தார பஞ்சமப் பண்ணில் மற்றொரு திருப்பதிகத்தையும் பாடியருளியுள்ளார். குறிஞ்சிப் பண்ணில் உள்ள பாசுரம் ஒன்று வருமாறு:

' கோணா கணையானும் குளிர்தா மரையானும்

காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான் சேனார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்ஏத்த மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.” காந்தார பஞ்சமத்தில் உள்ள ஒரு பாசுரம் வருமாறு:

' கொம்பலைத் தழகெய்திய துண்ணிடைக் கோல வாண்மதி போல முகத்திரண் டம்பலைத்த கண்ணாள் முலைமேவிய வார்சடை.

- - шт5ёт கம்பலைத்தெழு காமுறு காளையர் காதலாற் கழற்சேவடி கைதொழ அம்பலத் துறைவான் அடியார்க்கடையா

வினையே." பிறகு வரும் 165-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "சண்பையாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய வரும், ஆண்மையும் த கு தி யு ம் கொண்டவருமாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத்தில் உள்ள