பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 27 f

'முன் ஒரு காலத்தில் திருமாலும், பிரமதேவனும் பன்றியின் உருவத்தை எடுத்துத் திருவடிகளைத் தேடிப் பார்த்தும், அன்னப் பறவையின் வடிவத்தை எடுத்து மேலே பறந்து திருமுடியைத் தேடிப் பார்த்தும் அவற்றை அறிய முடியாதவராகிய மூர்த்தியாராகிய நடராஜப் பெருமா னாருடைய சந்நிதியில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் நின்று கொண்டு சொற்கள் அடங்கிய மாலைகளாகிய திருப்பதிகங்களால் ஆறுகாலங்கள் எல்லாவற்றிலும் அந்த நடராஜப் பெருமானாரைத் துதித்து வணங்கி விட்டு பெருமையைப் பெற்று விளங்கும் பல வேதங்களாகிய வெள்ளம் சுற்றித் துதிக்கின்ற தங்கத் தகடுகளால் வேயப் பெற்ற திருக்கோயிலை வலமாக வந்து பிறகு திருக் கோயிலுக்கு வெளியில் அந்த நாயனார் எழுந்தருளினார்.' பாடல் வருமாறு: -

முன்மால் அயன்அறியா மூர்த்தியார் முன்கின்று சொன்மாலை யாற்காலம் எல்லாம் துதித்திறைஞ்சிப் பன்மா மறைவெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற பொன்மா ளிகையைவலம் கொண்டு புறம்போந்தார்.'

முன்-முன்பு ஒரு காலத்தில். மால்-திருமாலும். அயன். பிரமதேவனும். அறியா-பன்றியின் உருவத்தை எடுத்துத் திருவடிகளைத் தேடிப் பார்த்தும், அன்னப் பறவையின் வடிவத்தை எடுத்துத் திருமுடியைத தேடிப் பார்த்தும் அவற்றைத் தெரிந்து கொள்ள முடியாத. மூர்த்தியார்மூர்த்தியாராகிய நடராஜப் பெருமானாருடைய. மூர்த்திவடிவத்தைப் பெற்றவர். முன்-சந்நிதியில், நின்று-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் நின்று கொண்டு. சொல்-சொற் கள் அடங்கிய; ஒருமை பன்மை மயக்கம். மாலையால்மாலைகளாகிய பல திருப்பதிகங்களால்: ஒருமை பன்மை மயக்கம். காலம் எல்லாம்-ஆறு காலங்கள் எல்லாவற்றிலும், காலம்: ஒருமை பன்மை மயக்கம். துதித்து-நடராஜப் பெருமானாரைத் துதித்து. இறைஞ்சி-வணங்கி விட்டு. ப்:சந்தி. பல-பலவாகிய. மா-பெருமையைப் .ெ ப ற் று,