பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。芝70 பெரிய புராண விளக்கம்-10

பண்ணார் பதிகத் திருக்கடைக்காப் புப்பரவி உண்ணாடும் என்பும் உயிரும் கரைந்துருக்கும் விண்ணா யகன் கூத்து வெட்டவெளி

- யே திளைத்துக்

கண்ணா ரமுதுண்டார் காலம்பெற அழுதார்.'

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. காலம்-சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆல யத்தில் இருக்கும் கட்டுமலையின்மேல் விளங்கும் தோணியில் வீற்றிருக்கும் பெரியநாயகியாரை நேர்க்கித் தமக்குச் சிவஞானம் உண்டாகும் நல்ல காலத்தை. பெற.பெறும் பொருட்டு. அழுதார்-அழுதருளியவராகிய தி ரு ஞா ன சம்பந்த மூர்த்தி நாயனார். பண்-குறிஞ்சிப்பண். ஆர்அமைந்த, பதிக-அந்தத் திருப்பதிகத்தினுடைய. த்:சந்தி. திருக்கடைக்காப்பு-இறுதிப் பாசுரத்தில் த ம் மு ைட ய திருநாமத்தை வைத்துப் பாடியருளிய திருக்கடைக் காப்பாகிய பாசுரத்தையும். ப்: சந்தி. பரவி-பாடியருளி நடராஜப் பெருமானாரை வாழ்த்தி வணங்கி, உண்தம்முடைய திருமேனிக்குள். நாடும்-மேலே காணுமாறு அமைந்திருக்கும். என்பும்-எ லும்புகளையும்; ஒருமை பன்மை மயக்கம். உயிரும்-ஆவியையும். கரைந்து-கரையச் செய்து. உருக்கும்-பக்தியினால் உருகுமாறு புரியும். விண்-தேவ லோகத்தில் வாழும் தேவர்களினுடைய இட ஆகுபெயர். நாயகன்-த ைல வ ன ா கி ய நடராஜப் பெருமான். கூத்துபுரிந்தருளிய திருநடனத்தை. வெட்டவேளி-அந்த நாயனார் வெட்ட வெளியில். ஏ:அசை நிலை. திளைத்து-தரிசித்து ஆனந்த சாகரத்தில் முழுகி இன்புற்று. க்:சந்தி. கண்தம்முடைய கண்களில். ஆர்-நிறைந்து விளங்கும். அமுதுஅமிர்தத்தைப் போன்றவராகிய அந்த நடராஜப் பெரு மானாரை உவம ஆகுபெயர். உண்டார். தம்முடைய திருவுள்ளத்திற்குள் புகுமாறு விழுங்கினார்.

பிறகு வரும் 164-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: '