பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 275

மயக்கம். செய்ய-சிவந்த சடையார்-ச ட ப ா ர த் ைத த் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய பாகபதேசுவரர். திருவேட்களம்-திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவேட்களத்திற்கு. சென்று-சிதம்பரத்திலிருந்து எழுந் தருளி. கை-தம்முடைய கைகளை ஒருமை பன்மை மயக்கம். தொழுது-தம்முடைய தலையின்மேல் வைத்துக் கூப்பி அந்தப் பாசுபதேசுவரரைக் கும்பிட்டு விட்டு. சொல். இனிய சுவை உள்ள சொற்கள் அடங்கிய ஒருமை பன்மை மயக்கம் பதிகம்-ஒரு திருப்பதிகத்தை பாடி-பாடியருளி. வைகி அருளும் இடம்-தாம் தங்கிக் கொண்டருளும் தலம். அங்கு ஆக-அந்தத் திருவேட்களமாக. மன்று-அங்கே இருந்த :படியே சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச் சிற்றம்பலத்தில். ஆடும்-திருநடனம் புரிந்தருளும். ஐயன். தலைவனும், தந்தையைப் போன்றவனும், அழகைப் பெற்றவனும் ஆகிய நடராஜப் பெருமான். திரு.அழகிய, க்: சந்தி. கூத்து-ஆணந்தத் தாண்டவத்தை, க்: சந்தி. கும்பிட்டு-கும்பிட்டுவிட்டு. அணைவுறும்-அந்தத் திருவேட் களத்தில் தங்கிக் கொண்டிருக்கும். நாள்-காலத்தில்.

திருவேட்களம்: இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பாசுபதேசுவரர். அம்பிகை நல்ல நாயகி. இது சிதம்பரத்திற்குக் கிழக்குத் திசையில் இரண்டு மைல் தூரத்தில் உள்ளது. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம்பரத்தில் தங்கிக் கொண் டிருப்பதற்கு அஞ்சி இந்தத் தலத்தில் இருந்து கொண்டு சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானாரைத் தரிசித்து விட்டு மீண்டும் எழுந்தருளிய தலம் இது. இங்கே உள்ள ஆலயமும் சிவபுரியில் உள்ள இரண்டு ஆலயங்களும் ஒரே வகையான அமைப்பையும் அளவையும் கொண் டுள்ளன. இது அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் வழங்கி .யருளிய தலம். பாசுபதாஸ்திரத்தைத் தம்முடைய கையில் ஏந்திய உற்சவ மூர்த்தியும், அருச்சுனனுடைய உற்சவ விக்கிரகமும் இந்தத் திருக்கோயிலில் உள்ளன. இந்த