பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பெரிய புராண விளக்கம்-10

உற்சவம் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் நடை. பெறுகிறது. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தக்கராகப் பண்ணில் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: -

" அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்

ஆரழல் அங்கை அமர்ந்திலங்க மந்த முழவம் இயம்ப

மலைமகள் காண நின்றாடிச் சந்தம் இலங்கு நகுதலைகங்கை

தண்மதி யம்மய வேததும்ப வெந்த வெண்ணிறு மெய்பூசும் வேட்கள நன்னக ராரே.'

இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு:

நன்று நாள்தொறும் நம்வினை போயறும் என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம் சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தொழுமினே." இந்தத் தலத்தைப் பற்றிய மற்றொரு பாசுரம் வருமாறு:

" கட்டப் பட்டுக் கவலையில் விழாதே

பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர் கிட்ட னார்.திரு வேட்களம் கைதொழப் பட்ட வல்வின்ை யாயின மாறுமே."

பிறகு உள்ள 167-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தம்முடைய திருக்கரத்தில் மான் குட்டியை ஏந்திக் கொண்டிருப்பவராகிய பால்வண்ணநாதேசுவரர் தி ரு க் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருக்கழிப்பாலைக் குள் அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அடைந்து உண்மைகள் அடங்கிய சொற்களைப் பெற்ற் மாலையாகிய