பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 283; "

பற்றப்புலியூராகிய சிதம்பரத்திற்குள். ப்:சந்தி. புக்குநுழைந்து. அணையும்.சேரும். போழ்தின் கண-சமயத்தில்.

பிறகு வரும் 170-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிதம் பரத்திற்கு எழுந்தருளிய சமயத்தில் எல்லா உலகங்களுக்கும் தலைவராகிய நடராஜப் பெருமானார் வழங்கிய திருவருளி னால் அழகிய தில்லையாகிய சிதம்பரத்தில் வாழும் திரி புண்டரமாக அணிந்து கொண்டிருக்கும் விபூதியைத் தங்களுடைய திருமுகங்களில் பெற்ற தில்லைவாழ் அந்தணர் கள் மூவாயிரம் பேர்களும் தொண்டுகளைப் புரியும் பான்மையைக் கொண்ட சிவகணங்களினுடைய தலைவர் களாகக் காட்சியளிக்க அதனைத் தாம் பார்த்து அந்த இயல்பைத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனா' ருக்கும் காண்பித்தருளினார். பாடல் வருமாறு:

அண்டத் திறைவர் அருளால் அணிதில்லை முண்டத் திருற்ேறு மூவா யிரவர்களும் தொண்டத் தகைமைக் கணங்ாத ராய்த்தோன்றக் கண்டப் பரிசுபெரும் பாணர்க்கும் காட்டினார்.'

அண்டத்து-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். திருவேட்களத்திலிருந்து சிதம்பரத்திற்கு எழுந்தருளிய சமயத்தில் எல்லா உலகங்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். இறைவர்-தலைவராகிய நடராஜப் பெருமானார். அருளால்-வழங்கிய திருவருளினால், அணி-அழகிய. தில்லைதில்லையாகிய சிதம்பரத்தில் வாழும், முண்ட-திரிபுண்டர மாக அணிந்து கொண்டிருக்கும். த்:சந்தி. திருநீற்றுவிபூதியைத் தங்களுடைய திருமுகங்களில் பெற்ற மூவாயிர வர்களும்-தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும். தொண்ட தொண்டுகளைப் புரியும்; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தகைமை-பான்மையைக் கொண்ட. க்:சந்தி. கண-சிவகணங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நாதராய்-தலைவாகளாகி, ஒருமை பன்மை