பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பெரிய புராண விளக்கம்-1 "ே

"அந்தச் சிதம்பரத்தில் வாழும் அந்தத் தில்லைவாழ். அந்தணர்கள் மூவாயிரம் பேர்களினுடைய செளகில்யத் தினுக்கு ஒர் அளவு இல்லாமையையும் எண்ணி ஓங்கிப் பொங்கி எழும் விருப்பம் அகலாத திருவுள்ளத்தைப் பெற்ற வராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தேன் நறுமணம் கமழும் மலர்கள் மலர்ந்திருக்கும் பல வகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழிலைப் பெற்று விளங்கும் திருவேட்களத்தைத் தாண்டி மேலே எழுந்தருளி பல மலர்கள் மலர்ந்திருக்கும் அகழி சுற்றியிருக்கும் பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்துக்குள் நுழைந்து சேரும் சமயத்தில்.' பாடல் வருமாறு:

"ஆங்கவர்தம் சீலத் தளவின்மை யும் கினைந்தே

ஓங்கினழும் காதல் ஒழியாத உள்ளத்தார் தேங்கமழும் சோலைத் திருவேட் களம்கடந்து பூங்கிடங்கு சூழ்புலியூர்ப் புக்கனையும்

போழ்தின்கண்.'

இந்தப் பாடல் குளகம். ஆங்கு-அந்தச் சிதம்பரத்தில் வாழும். அவர்தம்-அந்தத் தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை, சீலத்து .ெ ச ள கீ ல் ய த் தி ற் கு. அளவு-ஒர் அளவும். இ ன் ைம யு ம் - இ ல் லா த பான் மையையும். நினைந்து-எண்ணி. ஏ. அசைநிலை. ஓங்கி எழும்.ஒங்கிப் பொங்கி எழும். காதல்-விருப்பம். ஒழியாதஅகலாத. உள்ளத்தார்-திருவுள்ளத்தைப் பெற்றவராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தேம்-தேன். கமழும்-நறுமணம் கமழும். சோலை-மலர்கள் மலர்ந் திருக்கும் பலவகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும். பூம்பொழிலைப் பெற்று விளங்கும். த்:சந்தி, திருவேட்களம்திருவேட்களத்தை. கடந்து-தாண்டி மேலே எழுந்தருளி. பூம்-பல நீர்ப்பூக்கள் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம்.கிடங்கு-அகழி. சூழ்-சுற்றியிருக்கும். புலியூர்-பெரும்