பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 2&I

வ:ைங்குபவராகி நெடுங்காலமாகப் புகழோடு விளங்கும் அழகிய தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் உயரமாக இருக்கும் அந்தத் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் வெற்றிக்கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடிகளுக்குச் சமீபத்தில் உள்ளவர்களாக விளங்கும் பாக்கியத்தைப் பார்த்து அந்த நாய்னார் வியப்பை அ.ை வாரானார். பாடல் வருமாறு:

பாடும் பதிகஇசை யாழ்ப்பாண ரும்பயிற்றி காடும் சிறப்பெய்த நாளும்கடம் போற்றுவார் டுேம் திருத்தில்லை அந்தணர்கள் நீள்மன்றுள் ஆடும் கழற்கணுக்க ராம்பே றதிசயிப்பார்.'

பாடும்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளும். பதிக-திருப்பதிகத்தில் அமைந்திருக்கும். இசை-சங்கீதத்தை. யாழ்ப்பாணரும்-தி ரு நீ ல க ண் - த் து யாழ்ப்பெரும்பாண நாயனாரும். பயிற்றி-தம்முடைய யாழில் வாசித்துப் பழகி. நாடும்-தாம் அடைவதற்கு விரும்பும். சிறப்பு-சிறப்பை எய்த-அடையுமாறு. நாளும்ஒவ்வொரு நாளும். நடம்-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜப் பெருமானார் புரிந்தருளும் திருநடனத்தை. போற்றுவார்-வாழ்த்தி வணங்குபவராகி; முற்றெச்சம். நீடும்-நெடுங்காலமாகப் புகழோடு விஷங்கும். திரு-அழகிய த்:சந்தி. தில்லை அந்தணர்கள்.தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர் களும். நீள்-உயரமாகத் தோன்றும். மன்றுள்-அந்தத் திருச் சிற்றம்பலத்தில். ஆடும்-திருநடனம் புரிந்தருளும். கழற்குவெற்றிக்கழலைப் பூண்டு கொண்டு விளங்கும் திருவடி களுக்கு ஆகுபெயர். அணுக்கர்-சமீபத்தில் உள்ளவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஆம்-ஆக விளங்கும். பேறு-பாக் கியத்தைப் பார்த்து, அதிசயிப்பார். அந்த நாயனார்

வியப்பை அடைபவரானார்.

அடுத்து உள்ள 169-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: