பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 2;

அவருடைய அன்புக்குரிய மனையாளின் பெருவிருப்பமும் நிறைவேறிட அம்மனையாளின் அழகிய வயிற்றில்(அக் குழந் தைப் பேறு) விருப்பம் உருப் பெற்றாற் போல் சம்பந்தர் தோன்றிடவும் இவ்வுலகம் அதனால் பெரும் பேறு கொண்ட தாக விளங்கிடச் செய்தார். பாடல் வருமாறு:

பெருத்தெழும் அன் பால்பெரிய நாச்சியா ருடன்

புகலித் திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்கீழ் வழிபட்டுக் கருத்துமுடிந் திடப்பரவும் காதலியார் மணி

வயிற்றில் உருத்தெரிய வரும்பெரும்பேறுலகுய்ய உளதாக." பெருத்தெழும்-மிக்கதாய் எழுந்த, அன்பால்-பக்தி யால், பெரிய நாக்யோருடன்-பார்வதி தேவியுடன். புகவிகோழியில், த்:சந்தி.திருத்தோணி வீற்றிருந்தார்.தோணியில் அமர்ந்த சிவபெருமானுடைய சேவடிக் கீழ்-செம்மையான திருவடிக்கீழ், வழிபட்டு-வணங்கி வழிபாடு செய்து வந்த, பரவும்-போற்றும். காதலியார்-சிவபாத இருதயருடன் கூடிய அன்பு மனையாளின். மணிவயிற்றில்-அழகிய வயிற்றில், கருத்து முடிந்திட-குழந்தைப் பேறு வேண்டும் என்ற விருப் பம் நிறைவேற வேண்டி. உருத்தெரிய வரும்.அவ்விருப்பம் ஒரு திருவுருவாய் அமைந்து தெளிவாகத் தெரிந்திட வருகின்றபடி, பெரும் பேறு-பெரிய அந்தப் பிள்ளைப் பேறு காரணமாக, உலகு-இந்தப் பரந்த உலகம். உய்ய உளதாகநற்கதி அடைய வேண்டும் என்ற நிலை உண்டாகும்படி, முந்தைய செய்யுளுடன் பிந்தைய செய்யுட்கள் தொடர்ந்து பின்பு ஒரு செய்யுளில் வினைமுற்றாக முடி யும் குளக வகை யைச் சேர்ந்தது இது.

பிறகு வரும் 21-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பக்தர்களை ஆட்களாக உடையவளாகிய பெரிய நாயகியோடு சீகாழியில் உள்ள பரமபுரீசருடைய ஆலயத்தில் விளங்கும் ஒரு கட்டு மலையின் மேல் இருக்கும் தோணியில்