பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. பெரிய புராண விளக்கம்-10

மனையறத்தில் இன்பமுறு மகப்பெறுவான்

விரும்புவார் அணையங்லை தலைகின்றே ஆடியசே வடிக்கமலம் நினைவுறமுன் பரசமயம் கிராகரித்து நீறாக்கும் புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றும்

t தவம்புரிந்தார்." மனையறத்தில்-அந்தச் சிவபாத இருதயர் தாம் நடத்தி வரும் இல்லற வாழ்க்கையில். இன்பம் உறு-ஆனந்தத்தை அடையும். மக-ஒரு குழந்தையை. ப்: சந்தி. பெறுவான்ஈன்றெடுக்கும் பொருட்டுத் தம்மிடம் அமைந்த விரும்பு வார்-விருப்பத்தை உடையவராகி; முற்றெச்சம். அனைய அத்தகைய நிலை-நிலையில். தலைநின்று-தலைசிறந்து நின்று. ஏ: அசைநிலை, ஆடிய-திருநடனத்தைப் புரிந் தருளிய, சேவடி-நடராஜப் பெருமானாருடைய சிவந்த திருவடிகளாகிய, அடி: ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கமலம்-செந்தாமரை மலர்களை ஒருமை பன்மை மயக்கம். நினைவு உற-தியானம் அமைய. முன்-முன்னால் பரசமயம் -சைவசமயம் அல்லாத வேறு சமயங்களாகிய சமண சமயத் தையும் பொளத்த சமயத்தையும்:ஒருமை பன்மை மயக்கம். நிராகரித்து-போக்கி விட்டு. நீறு ஆக்கும்-பொடிப் பொடி யாகச் செய்தருளும். மணி-மாணிக்கங்களைப் பதித்த: ஒருமை பன்மை மயக்கம். ப்: சந்தி. பூண்-அணிகலங்களை: ஒருமை பன்மை மயக்கம். புனை-அணிந்து கொண் ட. காதலனை-ஒர் ஆண் குழந்தையை. ப்: சந்தி. பெறஈன்றெடுக்கும் பொருட்டு. ப்:சந்தி. போற்றும்-பிரமபுரீசரை வாழ்த்திச் செய்யும். தவம்-தவத்தை. புரிந்தார்-செய்தார்.

பிறகு வரும் 20-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

‘மிகுந்த பக்திப் பெருக்குக் காரணமாக எழுந்த பேரன் பினுடன்,பெருமை மிக்க பார்வதியம்மையுடன்,புகலி எனும் சீகாழியில் எழுந்தருளித் திருத்தோணியாம் படகில் அமர்ந்து காட்சியளிக்கும் சிவபெருமானின் செம்மையான திருவடியின் கீழ்ப்பணிந்து வழிபட்டவரான சிவபாத இருதயருடன் கூடிய