பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 23

பெற்றவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். சாக்கியர் தம் -பெளத்தர்கள் ஆகியவர்கள் கூறும். சாக்கியர்: ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. பொய்-பொய்வார்த்தை கள்:ஒருமை பன்மை மயக்கம். ம்:சந்தி, மிகுத்து-மிகுதியாகப் பரவி. ஏ. அசைநிலை. ஆதி-எல்லா நூல்களுக்கு முதலில் தோன்றிய நூலாகிய, அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. மறை-வேதமார்க்கத்தில்; ஆகுபெயர். வழக்கம்-மக்கள் வாழ்ந்து வருவது. அருகி-குறைந்து போய். அரன்-ஹரனுடைய, ஹரன்-சங்காரத்தைச் செய்தருளு பவன்.அடியார்பால்-அடியவர்களிடம்: ஒருமை பன்மை மயக் கம். பூதி-விபூதி, சாதன-உருத்திராக்கம் முதலிய சைவ சமய சாதனங்களின் சா த ன ம்-சின்னம். விளக்கம் போற்றல் பெறாது-விளக்கம் பாதுகாத்தலைப் பெறாமல். ஒழியஒழிந்து போக. க்: சந்தி. கண்டு-அதைப் பார்த்து. ஏதம்-ஒரு குற்றமும். இல்-இல்லாத கடைக்குறை. சீர்-சீர்த்தியைப் பெற்ற, ச்: சந்தி, சிவபாத இருதயர்தாம்-சிவபாத இருதயர். தாம்: அசைநிலை. இடர்-துக்கமாகிய, உழந்தார்-சாகரத் தில் ஆழ்ந்தார். - -

பின்பு உள்ள 19-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'அந்தச் சிவபாத இருதயர் தாம் நடத்தி வரும் இல்லற வாழ்க்கையில் ஆனந்தத்தை அடையும் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் பொருட்டு உள்ள விருப்பத்தை உடைய வராகி அத்தகைய நிலையில் தலை சிறந்து நின்று திரு நடனத்தைப் புரிந்தருளிய நடராஜப் பெருமானாருடைய சி வ ந் த திருவடிகளாகிய செந்தாமரை மலர்களைத் தியானிக்க முன்னால் சைவசமயம் அல்லாத வேறு சமயங் களைப் போக்கி விட்டுப் பொடிப் பொடியாகச் செய்யும் மாணிக்கங்களைப் பதித்த அணிகலன்களை அணிந்து கொண்ட ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கும் பொருட்டுப் பிரமபுரீசரை வாழ்த்தும் தவத்தைச் செய்தார்.' :பாடல் வருமாறு: