பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_300 பெரிய புராண விளக்கம்-10

அந்த நாயனார் பக்தியோடும். பணிந்து-எழுந்தருளி ೨15ಣ್ಣೆ இங்கிளில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்தி சிவபெருமான்களை வணங்கி, ஏத்தி-துதித்து விட்டு. த்:சந்தி. துங்காது யதாக உள் ள. வண்-சொற்சுவை, பொருட்சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழி யில் அமைந்த, த்:சந்தி. தொடை மலர்-தொடுத்த மாலையில் உள்ள மலராகிய ஒரு திருப்பதிகத்தை. பாடிபாடியருளி. ப்.சந்தி, போய்-அப்பால் எழுந்தருளி. த்:சந்தி. செம்-சிவப்பாக விளங்கும். கண்-கண்களைப் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம் ஏற்றவர்-இடபவாகனத்தை ஒட்டுகிறவராகிய பழமலைநாதர். திருமுதுகுன்றினைதிருக்கோயில் விளங்கும் திருமுதுகுன்றாகிய விருத்தாசலத் துக்கு எழுந்தருளி. த்:சந்தி. தொழுது-விருத்தாசலேசுவரரை வணங்கி விட்டு. சென்று-அப்பால் எழுந்தருளி. அணை கின்றார்-வேறு சிவத்தலங்களை அடைகிறவரானார்.

திருமுதுகுன்று: இந்தச் சிவ த் த லம் முதுகுன்றம் விருத்தாசலம், பழமலை எனவும் வழங்கும். இது நடுநாட் டில் மணி முத்தா நதிக்கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் பழமலை நாதர், விருத்தாசலேசுவரர் என்பவை. அம்பிகை பெரிய நாயகி. தலவிருட்சம் வன்னிமரம். இது கூடலூருக்குத் தென் மேற்குத் திசையில் 3 மைல் தூரத்தில் உள்ளது. சுந்தர மூர்த்தி நாயனார் பரவை நாச்சியாருக்காகப் பொன் வழங்கியருளுமாறு பழமலை நாதரை வேண்டிக் கொண்ட தலம் இது. இந்தத் தலம் விருத்தக்காசி எனவும் வழங்கும். இந்தத் தலத்தில் தங்களுடைய உயிர்களை விடும் பிராணி களுக்கெல்லாம் பெரிய நாயகி அம்மையார் தம்முடைய மேலாக்கினால் வீசி இளைப்பை ஆற்ற பழமலை நாதர் பஞ்சாட்சர உபதேசம் புரிந்தருளி அந்தப் பிராணிகளைத் தம்முடைய திருவுருவமாக ஆக்கியருளும் தலம் இது. இது காசியினும் சிறந்தது. இந்தச் சிறப்பைக் கந்த புராணத்தில் உள்ள வழிநடைப் படலத்தில் வரும், .