பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.06 பெரிய புராண விளக்கம்-19

ளாகிய இரண்டு மலர்களைப் பாடியருளி அந்தப் பழமலை நாதரைத் துதித்து விட்டு சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின்மேல் விளங்கும் தோனியில் வீற்றிருந்தருளும் பெரியநாயகியார் தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற்கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து வழங்கிய சிவஞான மாகிய பால் என்னும் விருந்தை நுகர்ந்தவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் நம்பராகிய அந்த விருததாச லேசுவரர் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தை அடைந்து அந்தத் திருக்கோயிலுக்கு உள்ளே நுழைந்து வண்டுகள் மொய்த்து ரீங்காரம் செய்யும் குளிர்ச்சியைப் பெற்ற கொன்றைமலர் மாலையை அணிந்தவராகிய அந்த விருத் தாசலேசுவரருடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளாகிய ஆனந்த சாகரத்தில் முழுகி இன்புற்ற பக்தியோடு அந்த நாயனார் தரையில் விழுந்து பழமலைநாதரை வணங்கினார். பாடல் வருமாறு:

"வான காயகர் திருமுது குன்றினை

வழிபட வலங்கொள்வார்

துரு றுந் தமிழ்ச் சொல்லிருக் குக்குறள்

துணைமலர் மொழிந்தேத்தி

ஞான போனகர் நம்பர்தம் கோயிலை

கண்ணி அங் குள் புக் குத்

தேன. லம்புதண் கொன்றையார் சேவடி திளைத்தஅன் பொடு.தாழ்ந்தார்.'

வான.தேவலோகத்தில் வாழும் தேவர்களினுடைய: இட ஆகுபெயர். நாயகர்-தலைவராகிய பழமலைநாதர். திருமுதுகுன்றினை-திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருமுதுகுன்றாகிய விருத்தாசலத்துக்கு உருபு , வழிபட-எழுந்தருளி விருத்தாசலேசுவரரை வணங் குவதற்காக, வலங்கொள்வார்-திருக்கோயிலை வலமாக வரு i.வா;ெ முற்றெச்சம், தாதாய நறும் நறுமணம் கமழும்.