பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் .309

பதற்குக் குளிர்ச்சியைத் தரும். தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. தி: சந்தி. தொடை-தொடுத்தலைக் கொண்ட மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை. சாத்தி-அந்த விருத்தாச லேசுவரருக்கு அணிந்து. வாழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. போந்து-அந்த விருத்தாசலத்திலிருந்துஎழுந்தருளி அங்கண்அந்த இடத்தில் உள்ள. வளம்-நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம்-ஆலய வளம், விருந்தினரை ஒம்பும் வளம் முதலிய வளங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக் கம். பதி-சிலத்தலமாகிய. அதனிடை-அந்த விருத்தாசலத் தில். வைகுவார்-தங்கிக் கொண்டு இருப்பவராகி, முற்றெச் சம். மணி வெற்பு-அழகிய பழமலையை. ச்: சந்தி சூழ்ந்தசுற்றி ஒடும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற, புனல்-நீர், சுலவுநிறைந்து ஓடும். முத்தாற்றொடு-மணிமுத்தா நதியோடு. தொடுத்த-சேர்த்துக் கட்டிய சொல்.சொற்கள் அடங்கிய: ஒருமை பன்மை மயக்கம். தொடை.தொடுத்தலைப் பெற்ற, மாலை-மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை. வீழ்ந்த-தாம் விரும்பிய காதலால்-விருப்பத்தோடு; உருபு மயக்கம். பல முறை-பல தடவைகள். முறை: ஒருமை பன்மை மயக்கம். விளம்பி-பாடியருளி. ஏ. அசைநிலை. சில நாள்கள்-சில தினங்கள். மேவினார்-அந்த விருத்தாசலத்தில் அந்த நாய னார் தங்கிக் கொண்டிருந்தார்.

அவ்வாறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு திருமுக்கால் வருமாறு: முரசதிர்ந்தெழுதரு முதுகுன்றம் மேவிய பரசமர் படையுடை யீரே - பரசமர் படையுடை யீருமைப் பரவுவார் அரசர்கள் உலகில் ஆவாரே."

பிறகு வரும் 184-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'அந்த விருத்தாசலத்தில் எழுந்தருளியிருக்கும் நாதராகிய பழமலைநாதரை வணங்கித் திருப்பெண்ணாகடத்தை அடைந்து பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக