பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பெரிய புராணம் விளக்கம்-1ை

திருவரத்துறை: இந்தச் சிவத்தலம் நெல்வாயில் எனவும் வழங்கும். இது நடு நாட்டில் வெள்ளாற்றங் கரையில் உள்ளது. இங்கே கோயில் கொண்டிருப்பவர் அரத்துறைநாதர், அம்பிகை ஆனந்தநாயகி. இது பெண்ணா கடத்திற்குத் தென்மேற்குத் திசையில் நான்குமைல் தூரத்தில் நிவா என்னும் வெள்ளாற்றின் கரையில் உள்ளது. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு அரத்துறை நாதர் முத்துச் சிவிகையையும், முத்துக்குடையையும், முத்துச் சின்னங்களையும் வழங்கியருளிய தலம் இது. அருணகிரி' நாதர் தாம் பாடிய திருப்புகழில் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் திருப்புகழ்ப் பாடலின் பகுதி வருமாறு: -

  • பிறவியைத் தணித்தருளும் நிட்களப்

பிரமசிற்சுகக் - கடல்மூழ்கும் பெருமுளித்தி ரட்பரவு செய்ப்பதிப்

பிரபல கொச்சையாற் - சதுர்வேதச் சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்

சிவிகை யைக்கொடுத் - தருளிசன் செகதலத்தினிற் புகழ்ப டைத்தமெய்த் திருவரத்துறைப் - பெருமாளே."

இந்தத் தலத்தைப் பற்றிப் பியந்தைக் காந்தாரப்: பண்ணில திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய, ஒரு பாசுரம் வருமாறு:

எந்தை ஈசன் எம்பெருமான்

ஏறமர் கடவுள் எேைறத்திச் சிந்தை செய்பவர்க் கல்லாற்

சென்றுகை கூடுவ தன்றால் கந்தமா மலருந்திக் கடும்புனல் நிவா மலகு கரைமேல் அந்தண் சோலை நெல்வாயில்

அரத்துறை அடிகள் தம் மருளே.'