பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 2?”

ஒருமை பன்மை மயக்கம். உடைய-பெற்ற ஈரைந்து-பத்து. திங்களினும் மாதங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம், நலம்-நன்மைகள் : ஒருமை பன்மை மயக்கம். சிறப்ப-சிறந்து விளங்க. க்: சந்தி. கேளிருடன்-தம்முடைய உறவினர்" களோடு: ஒருமை பன்மை மயக்கம், செயல்-உரிய மங்கல காரியங்களை ஒருமை பன்மை மயக்கம். புரிந்து-செய்து நிறைவேற்றி. பேரின்பம்-பேரானந்தத்தோடு, கிளர்வு உறுகிளர்ச்சியைப் பெற்று. நாள்-வாழும் காலத்தில்,

பின்பு வரும் 22-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

சூரியன் முதலாக உள்ள கிரகங்கள் எல்லாம் அழகைப் பெற்ற உச்சஸ்தானங்களில் பெருகியுள்ள வலிமையோடு நிற்க விரும்பத்தக்க நல்ல முகூர்த்தம் எழுமாறு அழகு. கிளர்ச்சி பெற்று எழும் திருவாதிரை நட்சத்திரத்தில் கிழக்கு, மேற்கு,வடக்கு,தெற்கு,வடகிழக்கு,வடமேற்கு,தென்கிழக்கு, - தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளில் உள்ள ஊர்களில் வாழும் மக்கள் விளக்கத்தைப் பெறவும் சைவ சமயம் அல்லாத வேறு சமயங்களாகிய சமணசமயத்தையும் பெளத்த சமயத்தையும் சார்ந்த சமணர்கள், பெளத்தர்கள் என்ப வர்கள் கொண்ட கருவம் போக சைவ சமயம் முதலாக உள்ள வைதிக சமயங்களும் தழைப்பை அடைந்து ஒங்கி நிற்க. பாடல் வருமாறு: - - -

" அருக்கன்முதற் கோள்.அனைத்தும் அழகியஉச்

- சங்களிலே பெருக்கவலி யுடன்கிற்கப் பேணியால் லோரைனழத் திருக்கிளரும் ஆதிரைகாள் திசைவிளங்கப் பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமும்

- - தழைத்தோங்க." இந்தப் பாடலும் குளகம். அருக்கன்-சூரியன். முதல்முதலாக உள்ள. கோள்-கிரகங்கள்: ஒருமை பன்மை மயக் கம். அனைத்தும்-எல்லாம். அந்தக் கிரகங்களாவன: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், பிருகஸ்பதி, சுக்கிரன், சனி