பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。翌3 பெரிய புராண விளக்கம்-10

பகவாள், ராகு, கேது என்பவை. அழகிய-அழகைப் பெற்ற. உச்சங்களில்-உச்சஸ்தானங்களில், ஏ: அசைநிலை. பெருக்கபெருகியுள்ள. வலியுடன் நிற்க-வலிமையோடு நின்று கொண் டிருக்க, ப்: சந்தி, பேணிய-விரும்பத்தக்க, நல்-நல்ல. ஒரைமுகூர்த்தம். எழ-எழுமாறு. த், சந்தி, திரு-அழகு, க்: சந்தி. கிளரும்-கிளர்ச்சியைப் பெற்று எழும். ஆதிரைநாள்-திரு வாதிரை நட்சத்திரத்தில். திசை-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளில் உள்ள ஊர்களில் வாழும் மக்கள் இடஆகுபெயர். திசை ஒருமை பன்மை மயக்கம். விளங்க-விளக்கத்தைப் பெறவும். ப்: சந்தி. பரசமய-சைவ சமயம் அல்லாத வேறு சமயங்களாகிய சமண சமயத்தையும் பெளத்த சமயத்தையும் சார்ந்த சமணர்கள், பெளத்தர்கள் என்பவர்கள் கொண்டிருந்த சமய: ஒருமை பன்மை மயக் கம். த், சந்தி, தருக்கு-கர்வம். ஒழிய-அடியோடு போய்விட. ச் சந்தி.சைவம். சைவசமயம், முதல்-முதலாக உள்ள வைதி கமும்-வைதிக சமயங்களும். அவையாவன: சைவம், கான பத்தியம்,செளமாரம்,சாக்தம்,வைணவம்,செளரம் என்னும் ஆறு சமயங்கள் வைதிகமும் ஒருமை பன்மை மயக்கம். தழைத்து-தழைப்பை அடைந்து. ஓங்க-ஒங்கி நிற்க.

அடுத்து உள்ள 23-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'அந்தச் சீகாழியில் வாழும் பிரமபுரீசருடைய திருத் தொண்டர்களினுடைய திருவுள்ளங்களில் மகிழ்ச்சி சிறந்து ஓங்கவும், பரிசுத்தமான விபூதியைத் திருமேனி முழுவதும் பூசிக் கொள்ளும் சைவ சமய வழி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு. வடமேற்கு, தென்கிழக்கு, தென் மேற்கு என்னும் எட்டுத் திசைகளிலும் உள்ள சிவத்தலங் களில் வாழும் மக்களிடம் ஒப்பற்ற முறையில் நிகழ்ந்து வரவும், ஏழு உலகங்களிலும் வாழ்பவர்கள் தங்கள் திருவுள் ளங்களில் குளிர்ச்சியைப் பெற்றுவிளங்கவும்,தேவர்களுடைய கூட்டம் வியப்பை அடையவும், வேதியர்கள் வேள்விகளில் பெய்யும் ஆகுதிகள் பெருகி வரவும், வளப்பம் பொருந்திய