பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் ago

செந்தமிழ் நாட்டில் வாழும் மக்கள் புரிந்த தவம் நிறைய வும், பெருமையைப் பெற்று விளங்கும் தவத்தைப் புரியும் தவசிகள் புரியும் தவமாகிய செயல் வாய்ப்பாக அமையவும்." பாடல் வருமாறு:

தொண்டர்மனம் களிசிறப்பத் தூயதிரு நீற்றுநெறி எண்டிசையும் தனிகடப்ப ஏழுலகும் குளிர்துங்க அண்டர்குலம் அதிசயிப்பு அந்தணர்ஆ குதிபெருக வண்டமிழ்செய் தவம்கிரம்ப மாதவத்தோர் செயற் வாய்ப்பு : இந்தப் பாடலும் குளகம். தொண்டர்-அந்தச் சீகாழி யில் வாழும் பிரமபுரீசருடைய திருத் தொண்டர்களினு டைய ஒருமை பன்மை மயக்கம். மனம்-திருவுள்ளங்களில்; ஒருமை பன்மை மயக்கம். களிமகிழ்ச்சி. சிறப்ப-சிறந்து ஓங்கவும். த், சந்தி. தூய-பரிசுத்தமாக உள்ள. திரு நிற்று. விபூதியைத் திருமேனி முழுவதும் பூசிக் கொள்ளும். நெறிசைவசமய வழி. எண் திசையும்-கிழக்கு, மேற்கு, வடக்கு. தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு என்னும் எட்டுத் திசைகளிலும் உள்ள சிவத்தலங் களில் வாழும் மக்களிடம் இடஆகுபெயர் திசை ஒருமை பன்மை மயக்கம். தனி-ஒப்பற்ற முறையில். நடப்ப-நிகழ்ந்து வரவும். ஏழு உலகும்-ஏழு உலகங்களில் வாழ்பவர்களும்; இட ஆகுபெயர். உலகு: ஒருமை பன்மை மயக்கம். குளிர்தங்களுடைய திருவுள்ளங்களில் குளிர்ச்சியைப் பெற்று. துாங்க-விளங்கவும். அண்டர்-தேவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். குலம்-கூட்டம்: சாதியினர் எனலும் ஆம்; திணை மயக்கம். அதிசயிப்ப-வியப்பை அடையவும். அந்தணர்-வேதியர்கள் ஒருமை பன்மை மயக்கம். ஆகுதி. தாங்கள் புரியும் வேள்விகளில் தேவர்களுக்காகப் பெய்யும நெய் முதலிய ஆகுதிகள் ஒருமை பன்மை மயக்கம் பெருகபெருகி வரவும். வண்-சொற்சுவை, பொருட்சுவை கன்னும் வளப்பத்தைப் பெற்றி. தமிழ்-செந்தமிழ் நாட்டில் வாழும் மக்கள் இடஆகுபெயர். தமிழ்: ஆகு பெயர் செய்-முற்