பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெரிய புராண விளக்கம்-10

பிறப்பில் புரிந்த, தவம்-தவத்தின் பயன் ஆகுபெயர். நிரம்ப-நிறையவும். மா-பெருமையைப் பெற்று விளங்கும். தவத்தோர் தவத்தைச் செய்யும் தவசிகள்: ஒருமை பன்மை மயக்கம். செயல்-செய்யும் செயலாகிய தவம். வாய்ப்பவாய்ப்பாக அமையவும். 'தன்னுடைய பயனை வழங்கவும்" எனலும் ஆம்.

பின்பு உள்ள 24-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: கிழக்கு, மேற்கு, வடக்கு த்ெற்கு, வடகிழக்கு, வட மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத்திசை களில் உள்ள சிவத்தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள பெருமைகள் எல்லாவற்றையும் தெற்குத் திசையில் விளங்கும் இவத்தலங்களே வெற்றியைப் பெற்று மேலும் மேலும் ஏறி வரவும், மேலே உள்ள தேவலோகத்தையும், வேறாக உள்ள உலகங்களையும் இந்தப் பூவுலகமே ஒப்பற்ற முறையில் வெற். றியை அடையவும், தளர்ச்சி இல்லாத சொற்சுவை,பொருட் தவை என்னும் செழிப்பைப் பெற்று விளங்கும் செந்தமிழ் நாட்டில் வழங்கும் வழக்கங்களே, வேறு நாடுகளில் வழங் கும் வழக்குக்களாகிய துறையை வென்று வெற்றி பெறவும், சங்கீதம் முழுவதையும் பாடும் சங்கீத விற்பன்னர்களும், உண்மையான சிவஞானத்தைப் பெற்றவர்களும் தங்களுக்கு வாழ்வதற்கு உரிய இடங்களாக மேற்கொள்ளும் நிலை சீகாழியில் பெருகவும். பாடல் வருமாறு: -

திசை அனைத்தின் பெருமைஎலாம் தென்றிசையே - - - வென்றேற மிசைஉலகும் பிறஉலகும் மேதினியே தனிவெல்ல அசைவில்செழும் தமிழ்வழக்கே அயல்வழக்கின்

- துறைவெல்ல இசைமுழுதும் மெய்யறிவும் இடம்கொள்ளும் - கிலைபெருக."

இந்தப் பாடலும் குளகம். திசை-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு,