பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 பெரிய புராண விளக்கம்-18:

துறை நாதர். திருவுளம்-தம்முடைய திருவுள்ளத்தில்

உளம்: இடைக்குறை. செய்தனர்-மகிழ்ச்சியை அடைந்து

புரிந்தருளினார்.

பின்பு வரும் 195-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஏறுவதற். காகப் பல்லக்கையும், பிடித்துக் கொள்ளக் குடையையும், தம்முடைய திருநாமத்தைச் சொல்லி ஊதுவதற்காக அமைந்த தங்கச் சின்னங்களையும் ஒப்பு இல்லாத முத்துக் களினுடைய வடிவங்களால் அமையுமாறு நிலைபெற்று விளங்கிய விபூதியைப் பூசிக்கொள்ளுதலை மகிழ்ந்து ஏற்றுக் கொண்ட ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங். களும் இயல்பாகவே இல்லாதவராகிய அரத்துறை நாதர் வழங்கியருளுபவரானார். பாடல் வருமாறு:

ஏறு தற்குச் சிவிகை, இடக்குடை,

கூறி ஊதக் குலவுபொற் சின்னங்கள்,

மாறில் முத்தின் படியினால் மன்னிய

ஆறு வந்த கிமலர் அருளுவார்.'

ஏறுதற்கு-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்

ஏறிப் போவதற்காக, ச் சந்தி. சிவிகை-பல்லக்கையும். இட-பிடித்துக் கொள்வதற்காக க்: சந்தி. குடை-குடை யையும். கூறி-தம்முடைய திருநாமத்தைச் சொல்லி. ஊத-ஊதுவதற்காக. க்: சந்தி. கு ல வு. அ ைம நீ த. பொற்சின்னங்கள்-தங்கத்தாற் செய்த சின்னங்களையும்.

மாறு-ஒப்பு. இ ல்-இ ல் லா த: கடைக்குறை. முத்தின்-முத்துக்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். படியினால்-வடிவங்களால் ஒருமை பன் மை மயக்கம்.

மன்னிய-நிலைபெற்று விளங்கிய. நீறு-விபூதியைப் பூசிக் கொள்ளுதலை. உவந்த-மகிழ்ந்து ஏற்றுக் கொண்ட நிமலர்-ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங் களும் இயல்பாகவே இல்லாதவரும், திருநெல்லாயில் அரத் துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவரு,