பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 3.27 .

சடத்தில். அணைந்து-நீங்கள் போய்ச் சேர்ந்து. கொடும். வழங்குவீர்களாக, என-என்று அந்த அரத்துறை நாதசி திருவாய் மலர்ந்தருளிச் செய்ய; இடைக்குறை.

பின்பு உள்ள 198-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'திருநெல்வாயில் அரத்துறையில் வாழ்ந்து வரும் வேதியர்கள் தாங்கள் துயிலும்போது கண்ட சொப்பனத்தில் அரத்துறைநாதர் திருவாய் மலர்ந்தருளிச் செய்த அந்தச் சமயத்தில் அந்த வேதியர்கள் யாவரும் வந்து ஒன்றாகக் கூடிக்கொண்டு மகிழ்ச்சியை அடைந்து வியப்பை அடையும் திருவுள்ளங்களோடும் செழிப்பைப் பெற்ற நீர்வளத்தைக் கொண்ட திருநெல்வாயில் அரத்துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவரும், தம்முடைய தலையின் மேல் பிறைச்சந்திரனை அணிந்து கொண்டவரும் ஆகிய அரத்துறை நாதர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்கு அந்த வேதியர்கள் வந்து சேர்ந்தார்கள். பாடல் வருமாறு:

" அந்த ணாளர் உரைத்தஅப் போழ்தினில்

வந்து முடி மகிழ்ந்தற் புதமுறும் சிந்தை யோடும் செழுாே அரத்துறை இந்து சேகரர் கோயில்வம் தெய்தினர்.'

அ ந் த ண | ள ர்- திருநெல்வாயில் அரத்துறையில் வாழ்ந்து வரும் வேதியர்கள்: ஒருமை பன்மை மயக்கம். உரைத்த-தாங்கள் துயிலும்போது கண்ட சொப்பனத்தில் அரத்துறை நாதர் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தருளிச் செய்த. அப்போழ்தினில்-அந்தச் சமயத்தில். வந்து அந்த வேதியர்கள் யாவரும் வந்து. கூடி-ஒன்றாகக் கூடிக் கொண்டு. மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. அற்புதம் உறும்-வியப்பை அடையும். சிந்தையோடும்-திருவுள்ளங் களோடும்; ஒருமை பன்மை மயக்கம். செழு-செழிப்பைப் பெற்ற, நீர்-நீர் வளத்தைக் கொண்ட அரத்துறை-திருநெல் வாயில அரத்துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருப்பவரும; இடஆகுபெயர். இந்து-பிறைச்சநதிரனை.