பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பெரிய புராண விளக்கம்-இ.

பிறகு வரும் 197-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

'அந்தத் திருநெல்வாயில் அரத்துறையில் வாழ்ந்து வரும் வேதியர்களுக்கு அவர்கள் துயிலும் போது கண்ட சொப்பனத்தில் அரத்துறை நாதர் எழுந்தருளி, 'திருஞான சம்பந்தன் நம்மிடம் வருகிறான்; அ வ னு க் கு ப் பெருமையைப் பெற்று விளங்கும் முத்துச் சிவிகை, அழகிகr முத்துக்குடை, ஆக உள்ள சின்னங்களை எம்மிடம் பெற்றுக் கொண்டு கற்றுக் கொள்வதற்கு அருமையாக இருக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கு அரசனாகிய அந்தத் திருஞான சம்பந்தனிடம் அடைந்து வழங்குவீர்களாக’ என்று அந்த அரத்துறை நாதர் திருவாய் மலர்ந்து அருளிச் செய்ய. பாடல் வருமாறு:

ஞான சம்பந்தன் கம்பால் அணைகின்றான்; மான முத்தின் சிவிகை, மணிக்குடை ஆன சின்னம்கம் பாற்கொண் டருங்கலைக் கோன வன்பால் அணைந்து கொடும்' என.' இந்தப் பாடலும் குளகம். ஞான சம்பந்தன்-அந்தத் திருநெல்வாயில் அரத்துறையில் வாழ்ந்து வரும் வேதியர் களுக்கு அவர்கள் துயிலும்போது கண்ட சொப்பனத்தில் அரத்துறைநாதர் எழுந்தருளித் திருஞான சம்பந்தன். நம்பால்-எம்மிடம். அணைகின்றான்-வருகிறான். மானஅவனுக்குப் பெருமையைப் பெற்று விளங்கும். முத்தின்முத்துக்களால் செய்யப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். சிவிகை-பல்லக்கு. மணி-அழகிய, க்:சந்தி. குடை-முத்துக் குடை. ஆன-ஆக உள்ள சின்னம்-சின்னங்களை ஒருமை பன்மை மயக்கம். நம்பால்-எம்மிடம் கொண்டு நீங்கள் பெற்றுக் கொண்டு. அரும் கற்பதற்கு அருமையாக இருக்கும். கலை. அறுபத்து நான்கு கலைகளுக்கு: ஒருமை. பன்மை மயக்கம். அந்தக் கலைககள் இன்ன என்பதை வேறு ஓரிடத்தில் கூறினோம்: ஆண்டுக் கண்டுணர்க. கோன்அரசனாகிய, அவன் பால்-அந்தத் திருஞான சம்பந்தனி