பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 33].”

அடுத்து உள்ள 202-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு.

"முத்துக்குடை முதலியவற்றைத் திருஞான சம்பந்த. மூர்த்தி நாயனார் பார்த்த பிறகு அந்த நாயனார் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின்மேல் கூப்பி' அரத்துறை நாதரை கும்பிட்டு விட்டுப் பிறகு தரையில் விழுந்து வணங்கி அப்பால் தரையிலிருந்து எழுந்து நின்று. கொண்டு, 'இந்த முத்துக்குடை முதலியவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்' கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளுக்கும். விளக்கும் திருவிளக்கு ஆகும்' என்று திருவாய் மலர்ந்தருளிச், செய்ய, அரத்துறை நாதருடைய தொண்டர்களோடும், திருநெல்வாயில் அரத்துறையில் வாழ்ந்து வரும் வேதியர்கள் அந்த நாயனாரைச் சுற்றிக் கொண்டு எழுந்து நின்று. கொண்டு தேவர்கள் வாழும் தேவலோகமும் தெரிந்து கொள்ளுமாறு பெருமுழக்கத்தை எழுப்பினார்கள். பாடல்" வருமாறு:

' கண்ட பின் அவர் கைதலை மேற்குவித்

"தெண்டி சைக்கும் விளக்கிவை ஆம்'எனத் தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்தெழுங் தண்டர் காடும் அறிவுற ஆர்த்தனர்.' கண்ட-அரத்துறை நாதர் வழங்கிய முத்துக்குடை முதலியவற்றைப் பார்த்து. பின்-பிறகு. அவர்-அந்தத். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாா. கை-தம்முடைய கைகளை ஒருமை பன்மை மயக்கம். தலைமேல்-தம்முடைய தலைமேல். குவித்து-கூப்பி அரத்துறை நாதரைக் கும்பிட்டு விட்டுப் பிறகு தரையில் விழுந்து அந்த நாதரை வணங்கி விட்டு அப்பால் தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. இவை-இந்த முத்துக்குடை முதலியவை. எண் திசைக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளுக்கும். திசை:ஒருமை பன்மை மயக்கம. விளக்கு-விளக்கும் திரு. விளக்கு. ஆம்-ஆகும். என-என்று அந்த நாயனார் திருவாய்,