பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.36 - பெரிய புராண விளக்கம்-10

ஆகிய அவை கொள்ளலாகும்-நீ பெற்றுக் கொள்ள உரியவை ஆகும். கொண்டு-அவற்றை நீ எடுத்துக் கொண்டு. உய்த்தல்-செலுத்துதலை. .ெ ச ய் வாய்புரி வாயாக. என-என்று இடைக்குறை. உள்ளவாறு-உள்ள படி. அருள் செய்ய-அரத்துறை நாதர் திருஞான சம்பத்தி மூர்த்தி நாயனார் துயிலும பொழுது அவா கண்ட சொப் பனத்தில் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. உணர்ந்தஅந்த நாயனார் தாம் மேற்கொண்டிருந்த துயிலிலிருந்து விழித்து எழுந்த பி. பிறகு.

பிறகு வரும் 207-ஆம் பாடலின் கருத்து வருமாறு: சண்பையாகிய சீகாழியை ஆட்சி புரிந்தருளும் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தாம் பார்த்தில் உண்மையாகிய அரத்துறை நாதர் வழங்கிய திரு. வருளினுடைய குணத்தைத் தம்முடைய தந்தையாராகிய சிவபாத இருதயரோடு பக்கத்தில் தங்கிக் கொண்டிருக்கும் திருத்தொண்டர்களுக்குத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு அரத்துறை நாதரை வணங்குவதற்கு முன்பே ஆகாயம் தெளிவாகப் புலப்படுமாறு வீங்கிப் பரந்த இருட்டு அகன்றவுடன்.' பாடல் வருமாறு:

சண்பை ஆளியார் தாம்கண்ட மெய்யருட் பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர் தொண்ட ருக்கருள் செய்து தொழாமுனம் விண்பு லப்பட விங்கிருள் நீங்கலும்." இந்தப் பாடலும் குளகம். சண்பை-சண்பையாகிய சீகாழியை. ஆளியார்-ஆட்சி புரிந்தருளுபவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தாம் கண்ட-தாம் பார்த்த: மெய்-உண்மையாக உள்ள. அருள். அரத்துறை நாதர் வழங்கிய திருவருளினுடைய, பண்பு. குணத்தை, என்றது திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு அரத்துறை நாதர் முத்துப் பல்லக்கையும். முத்துக் குடையையும், பல வகையான சின்னங்களையும் வழங்கியருளியதை. தந்தை.