பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 335

நாதர்க்கும்-தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கும். அவ்விரா-ஆன்றைத் தினத்தில் இராத்திரி வேளையில், முத் தநற்சிவிகை-நல்ல முத்துப் பல்லக்கு. முதலாயின-முதலானவற்றை. என்றது முத்துக்குடை, பலவகையான சின்னங்கள் முதலியவற்றை. உய்த்து-சென்று செலுத்தி. அளிக்கும்படி-அந்த நாயனாருக்கு வழங்குமாறு. முன்-அந்த வேதியர்களுக்கு முன்னால், உணர்த்துவார். அரத்துறைநாதர் தெரியப்படுத்தியருள்வாரானார்.

பிறகு உள்ள 206-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

சேறும் நீரும் நிறைந்திருக்கும் வயல்கள் சுற்றி விளங்கும் திருநெல்வாயில் அரத்துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வள்ளலாராகிய அரத்துறை நாதர், "யாம் மகிழ்ச்சியை அடைந்து வழங்கும் முத்துப் பல்லக்கு, முத்துக்குடை, பலவகையான சின்னங்கள் ஆகிய அவை நீ பெற்றுக்கொள்ள உரியவை ஆகும்; அவற்றை நீ எடுத்துக் கொண்டு செலுத்துதலைப் புரிவாயாக' என்று உள்ளபடி திருவாய் மலர்ந்தருளிச் செய்ய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தாம் மேற்கொண்ட துயிலி லிருந்து விழித்து எழுந்த பிறகு பாடல் வருமாறு:

"அள்ளல் நீர்வயல் சூழும் அரத்துறை

வள்ள லார், நாம் மகிழ்க் தளிக்கும்.அவை கொள்ள லாகும் கொண்டுய்த்தல் செய்வாய்' என உள்ள வா றருள் செய்ய உணர்ந்தபின்.' இந்தப் பாடல் குளகம். அள்ளல்-சேறும். நீர்-நீரும் நிறைந்திருக்கும். வயல்-வயல்கள்: ஒருமை பன்மை மயக்கம். சூழும் சுற்றி விளங்கும். அரத்துறை-திருநெல் வாயில் அரத்துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி :பிருக்கும். வள்ளலார்-வள்ளன்மையைப் பெற்றவராகிய அரத்துறைநாதர். நாம்-யாம். மகிழ்ந்து- மகிழ்ச்சியை அடைந்து. அளிக்கும்-உனக்கு வழங்கும். அவை-முத்துப் பல்லக்கு, முத்துக்குடை, பலவகையாக உள்ள சின்னங்கள்