பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 334 பெரிய புராண விளக்கம்-10

ஆக-ஒரு குற்றமும். இல்-இல்லாத கடைக்குறை. சீர்சீர்த்தியைப் பெற்ற, ச்: சந்தி. சண்பை-சண்பையாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய, ஆண்-ஆண்மை யையும், தகை யார்-தகுதியையும் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு. எதிர்-எதிரில். தேசுஒளியை, உடைபெற்ற. ச்: சந்தி, சிவிகை-முத்துப்பல்லக்கு. முதலாயின-முதலாக உள்ளவற்றை; என்றது முத்துக் குடை, பலவகையான சின்னங்கள் முதலியவற்றை. ஈசர்பரமேசுவரராகிய அரத்துறைநாதர். இன் அருளால்வழங்கிய இனிய திருவருளினால். தாங்கி-சுமந்து கொண்டு. .ஏகினார்.போனார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து வரும் 205-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'இந்தத் திருநெல்வாயிலரத்துறையாகிய இடத்தில் அந்தச் சிவத்தலத்தில் வாழ்ந்து வரும் வேதியர்கள் இவ் வாறு போனார்கள் : அந்த இடத்தில் சண்பையாகிய சீகாழி யினுடைய தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கும் அன்றைத் தினத்தில் இராத்திரி வேளையில் நல்ல முத்துப் பல்லக்கு முதலானவற்றை எடுத்துக்கொண்டு சென்று செலுத்தி வழங்குமாறு அந்த வேதியர்களுக்கு முன்னால் அரத்துறை நாதர் தெரியப்படுத்துவாரானார்.'

பாடல் வருமாறு:

இத்த லைஇவர் இன்னணம் ஏகினார்; அத்த லைச்சண்பை காதர்க்கும் அவ்விரா முத்த கற்சி.வி கைமுத லாயின உய்த்த ளிக்கும் படிமுன் உணர்த்துவார்."; இத்தலை-இந்தத் திருநெல்வாயில் அரத்துறையாகிய இடத்தில். இவர் இவ்வாறு அந்தச் சிவத்தலத்தில் வாழ்ந்து வரும் இந்த வேதியர்கள்: ஒருமை பன்மை மயக்கம். இன்னணம்.இவ்வாறு; இந்த வண்ணம். ஏ கி ன.ா ர். போனார்கள்; ஒருமை பன்மை மயக்கம். அத்தலை-அந்த இடத்தில். சண்பை-சண்பையாகிய சீகாழியினுடைய.