பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருனரு சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 343

பாடியருளும். திருப்பதிகத்து-ஒரு திருப்பதிகத்தில் உள்ள. இசை-பண்ணினை. புந்தி-தம்முடைய அறிவு. ஆரதிருப்தியை அடையுமாறு. புகன்று-பாடியருளி. எதிர் -அந்த அரத்துறை நாதருடைய சந்நிதியில் நின்று கொண்டு. போற்றுவார். அந்த நாதரை வாழ்த்தி வணங்குவாரானார்.

இந்தப் பாடலில் குறிப்பிட்ட பாசுரம் பியந்தைக் காந்தாரப் பண்ணில் திருநெல்வாயில் அரத்துறையைப் உ மி த் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளியது. அந்தா பாசுரம் வருமாறு:

எந்தை ஈசன் எம்பெருமான்

ஏறமர் கடவுள்என் றேத்திச்

சிந்தை செய்பவர்க் கல்லால்

சென்றுகை கூடுவ தன் றயில்

கந்தமா மலருந்திக் கடும்புனல் நிவா மல்கு கரைமேல்

அந்தண் சோலை நெல்வாயில்

அரத்துறை அடிகள் தம் அருளே.'

பின்பு உள்ள 214-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

"அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், 'இவ்வாறு முத்துப் பல்லக்கு முதலியவை அடியேனுக்குக் கிடைத்த இந்தப் பேறு விபூதிய்ைய பூசிக் கொண்ட பழைய வனாகிய திருநெல்வாயில் அரத்துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சுவாமிகளாகிய அரத்துறை நாதர் வழங்கிய திருவருளால் கிடைத்ததே ஆகும்' என்று எண்ணி ஒப்பு இல்லாத சொற்கள் அடங்கிய மாலைகளாகிய பல திருப்பதிகங்களைப் பாடியருளி நீண்ட நேரமாக அந்த அரத்துறை நாதரை வாழ்த்தி வணங்கிவிட்டு அந்தத் திருப்பதிகத்தை நிறைவேற்றினார். பாடல் வருமாறு: