பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 பெரிய புராண விளக்கம்-10

பொடிஅ ரிைந்த புராணன் அரத்துறை அடிகள் தம்மரு ளே இது வாம்’ எனப் படியி லாதசொல் மாலைகள் பாடியே கெடிது போற்றிப் பதிகம் கிரப்பினார்."

இது-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இவ்வாறு முத்துப் பல்லக்கு முதலியவை அடியேனுக்குக் கிடைத்த இந்தப் பேறு. பொடி-விபூதியை. அணிந்த-பூசிக் கொண்ட புராணன்-பழையவனாகிய. அரத்துறை-திரு நெல்வாயில் அரத்துறையில் திருக்கோயில் கொண்டு எழுந்

தருளியிருக்கும் அடிகள் தம்-சுவாமிகளாகிய அரத்துறை நாதர். தம்: அசை நிலை. அருளே-வழங்கிய திருவருளால் கிடைத்ததே ஆம்-ஆகும். என-என்று எண்ணி; இடைக் குறை. ப்:சந்தி. படி-ஒப்பு. இலாத-இல்லாத: இடைக் குறை. சொல்-சொற்கள் அடங்கிய; ஒருமை பன்மை மயக்கம். மாலைகள்-மாலைகளாகிய பல திருப்பதிகங்களை. பாடி-பாடியருளி. ஏ. அசை நிலை, நெடிது-நெடு நேரமாக. போற்றி அந்த அரத்துறை நாதரை வாழ்த்தி வணங்கிவிட்டு. ப்:சந்தி. பதிகம்-அந்தத் திருப்பதிகத்தை நிரப்பினார்பாடியருளி நிறைவேற்றினார்.

பிறகு வரும் 215-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

"அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். 'உண்மையைப் பாதுகாத்து அதை விட்டு விடாத விருப்பத் தோடு தம்மைத் தியானிக்கும் இயல்பை வழங்கியருளி அடியேனை ஆளாகக் கொள்பவராகிய அரத்துறைநாதர் சிறப்பைப் பெற்ற முத்துக்களால் செய்யப் பெற்ற பல்லக்காகிய வாகனமாகிய சிறந்த பொருளை அடியேனுக்கு வழங்கியருளும் முத்துப் பல்லக்கு, முத்துக் குடை, பலவகை 4ாக உள்ள சின்னங்கள் ஆகியவற்றை எம்மை வேண்டி ம இ ழ் ச் சி யை க கொண்டு இன்றைக்கு வழங்கியதே. பாடல் வருமாறு: