பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器4翁 பெரிய புராண விளக்கக்-கீன்

திருநெல்வாயில் அரத்துறையைப் பற்றி இந்தளக் பண்ணில் அந்த நாயனார் பாடியருளிய ஒரு பாசுரங். வருமாறு : -

" புடையி னாற்புள்ளி கால பொருந்திய படையி னார்மனி நீர்நெல் வாயிலார் நடையி னால்பிரற் கோவ ணத்தயன் துடையி னார்எம துச்சி யாரோ." பிறகு வரும் 216-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஒளி வெள்ளத்தை வீசும் முத்துக்களால் அமைக்கப்பெற்ற பல்லக்கைச் சுற்றி வலமாக வந்து தரையின் மேல் விழுந்து அந்தப் பல்லக்கை வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு வெம்மையாக உள்ள விபூதி யினுடைய பிரகாசத்தை வாழ்த்திவிட்டு, தேவர்களுக்கும் முதல் தேவராகிய அரத்துறைநாதர் வழங்கிய திரு. வருளால் வந்தது ஆகையால் ந, ம, சி, வா, ய என்ற 岛西岛 எழுத்துக்களை ஓதி இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் எல்லாரும் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் அந்த முத்துப் பல்லக்கின்மேல் ஏறிக்கொண்டருளினார். பாடல் வருமாறு: -

சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார் மீது தாழ்ந்துவெண் ணிற்றொளி போற்றிகின் றாதி யார் அரு ளாதலின் அஞ்செழுத் தோதி ஏறினார் உய்ய உலகெலாம்.' சோதி-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனசரி ஒளிவெள்ளத்தை வீசும். முத்தின்-முத்துக்களால் அமைக்கப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். சிவிகை-பல்லக்கை. சூழ்வந்து-சுற்றி வலமாக வந்து. பார்மீது-தரையின்மேல். தாழ்ந்து-விழுந்து அந்தப் பல்லக்கை வணங்கிவிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. வெண்-வெண்மை யாக உள்ள. நீற்று-விபூதியினுடைய. ஒளி-பிரகாசத்தை.