பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 邻墨?’

போற்றி-வாழ்த்திவிட்டு. நின்று-நின்று கொண்டு. ஆதிகாரி. அந்த முத்துப்பல்லக்கு முதலியவை தமக்குக் கிடைத்தது. எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய அரத்துறை. நாதர். அருள்-திருவருளால் வழங்கிய. ஆதலின்-ஆகையால், அஞ்சு எழுத்து- ந, ம,சி,வா,ய என்னும் ஐந்து எழுத்துக்கன் அடங்கிய பஞ்சாட்சரத்தை எழுத்து : ஒருமை பன்மை மயக்கம். ஒதி-ஒதிவிட்டு. உலகு-இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் இட ஆகுபெயர். எலாம்-எல்லாரும்: இடைக்குறை. உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். ஏறினார்-அந்த முத்துப் பல்லக்கின் மேல் ஏறிக். கொண்டருளினார். - -

'உலகெலாம் என்னும் சொற்றொடர் இறைவன் திருத் தொண்டர் புராணத்துக்கு முதலாகக் கொடுத்தது-அதனை இப்புராண மு. த ற் பா ட் டி ல் முதற்சொற்றொடராக அமைத்தது மட்டுமன்றி இப் புராணத்தின் இடையிலும் இறுதியிலும் அமைத்தார். இடையில் அமைத்தது இங்கு: 4286 பாடல் உள்ள இப் புராணத்தில் இது 2:19-ஆம் பாடல் ஆதலின் ஓரளவுக்கு இடை ஆயிற்று.