பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 349."

பிள்ளையார். இறைவனும் இறைவியும் தந்தையும் தாயுமாக இருந்து ஊட்டியபடியால் 'ஆளுடைய பிள்ளை யார்' எனப் பெற்றார்-இப்போது சிவஞான சம்பந்தர் ஆனார்.

சிவஞானம், பவமறும் ஞானம், கலைஞானம், மெய்ஞ். ஞானம், ஆகிய பல்வகை ஞானங்களையும் தவமுனிவராய சம்பந்தர் அந் நிலையில் உணர்ந்தார்.

குளத்தின்கண் முழுகிக் கரையேறிய தந்தையார் கடை வாய் வழி பால் சோர நின்ற பிள்ளையாரைக் க்ைச் சிறிய கோல்கொண்டு ஒச்சி, நெருங்கினார்.

பேருணர்வில் பொலிகின்ற பிள்ளையார் ஒரு காலைத் தூக்கி, உச்சியினில் எடுத்தருளும் ஒரு திருக்கைச் சுட்டு விரலால் வானிடை மழவிடைமேல் பொன்மலைவல்லியுடன் உள்ள சிவபெருமானைக் காட்டி ஞானமொழியால் "தோடுடைய செவியன்' எனத் தொடங்கித் தம் 'உள்ளம் கவர் கள்வன் இவனே எனக் காட்டித் திருப்பதிகம் பாடித் திருமுறையாகிய தேவாரத்தைத் தொடங்கி வைத்தார். -

காழிநகரார் எதிர்கொண்டு வரவேற்கக் காழிநகர்ப் பெருமானை வணங்கித் திருக்கோயிலைச் சென்று வழிபட்டார். கையால் தாளமிட்டுப் பாட கோலக்கர் இறைவர் திருவருளால் பொற்றாளங்கள் அவர் கையகத்தே வந்து சேர்ந்தன. -

பிள்ளையார் தமது தாயார் அவதரித்த திருப்பதியாகிய திருநனிபள்ளியுள்ளார் வரவேற்கச் சென்று நனிபள்ளி உள்குவார்தம் பேரிடர் கெடுதற்கு ஆணை நமது எனத் திருக்கடைக்காப்புடன் பதிகம் பாடினார்.

திருவலம்புரம் வழிபட்டு, பல்லவனீச்சரம் பணிந்து போற்றிப் பரவி, திருச்சாய்க்காடு வணங்கிப் பாடினார். திருவெண்காடு சென்றார். கண்காட்டு நுதல்' எனும் பதிகத்தில் முக்குளத்தைச் சிறப்பித்துப் பாடினார்.