பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 351

பிள்ளையார் திருவரத்துறை வருகிறபோது அவர்தம் பாதங்கள் வருந்தின. பொருட்படுத்தாது விரைந்தார் சம்பந்தர். மாறன்பாடி எனும் பதி வந்தது. ஆறு செல்வருத்தத்தால் இளைப்பாறத் தங்கினார்.

இந்நிலையை அரத்துறைநாதர் திருவுளஞ் செய்தார் சம்பந்தப் பிள்ளையார் ஏறியருளச் சிவிகை, பிடிக்கக் குடை ஊதச்சின்னம் இவற்றை முத்தினாற் பொலியச் செய்து தரத் திருவுளம் பற்றினார். திருநெல்வாயில் அரத்துறை அந்தணர் தம் கனவில் தோன்றி ஞானசம்பந்தன் நம்பால் அணை கின்றான். முத்துச்சிவிகை. முத்துக்குடை, முத்துச்சின்னம் இவற்றை நம்பால் பெற்று அவர்க்குச் சேர்ப்பியுங்கள்' கான்று சொன்னார்.

மறையவர் வைகறையில் திருக்கோயில் சென்று திருக் கடைக்காப்பு நீக்கிய அளவில் இறைவன் திருவருளால் மூத்தால் ஆகிய பல்லக்கு, குடை, சின்னம் ஆகியவற்றைக் கண்டனர். அவற்றைச் சுமந்து கொண்டு சம்பந்தரை ரைவேற்கப் புறப்பட்டனர்.

இறைவன் சம்பந்தர்க்கும் தாம் தந்தனவற்றை ஏற்கும் படி அருளிச் செய்ய அதுகேட்டு தந்தையார்க்கும் அன்பர் கட்கும் தெரிவித்து வணங்கினார் பின்ளையார்.

காலை மலர்ந்தவுடன் அஞ்செழுத்தோதி மாறன்ாாடியி. விருந்து புறப்பட்டார். சூரியோதயம் ஆயிற்று. அரத்துறை வேதியர் சம்பந்தர் முன்தோன்றி இறைவன் அருளிய இவற்றை ஏற்றுக் கொள்க என வேண்டினார்.

அதுகேட்ட ஞானசம்பந்தப்பெருமான் மன்றுள் ஆடும் மாநடராசப்பெருமான் திருவருள் இது" என்று சொல்வி அணங்கினார்.

'எந்தை ஈசன்' எனத்தொடங்கும் திருப்பதிகம் பாடித் திருவுருளைப் போற்றிப் பரவி 'அரத்துறை அடிகள் தம் அருள்' என்று வாழ்த்தினார்.