பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 33

அடுத்து வரும் 26-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'வீணாக உள்ள செயல்களைப் பெருகச் செய்யும் புன் மையாகிய அறிவைப் பெற்ற சமண சமயம் முதலாக இருக் கும் வேறு சமயமாகிய பெளத்த சமயத்தைச் சார்ந்த சமணர்களும் பெளத்தர்களும் பாவங்களைப் பெருக்கி வரும குற்றம் உள்ள சமய வழிகள் பாழாகிப் போக நல்ல ஊழிக் காலம் ஒவ்வொன்றிலும் தவசிகள் தவத்தைப் பெருசக் செய்யும் சண்பையாகிய சீகாழியில் கேடு இல்லாத சரங்களும் அசரங்களும் ஆகிய யாவும் சைவ சமயத்தைப் பெருகி வளரு மாறு புரியும் ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவவதாரம் செய்தருளினார். பாடல் வருமாறு:

" அவம் பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம்

1 ஏகமயம பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்படங்ல் ஊழி

தொறும் தவம்பெருக்கும் சண்பையிலே தாவில் சரா

சரங்களெலாம் சிவம்பெருக்கும் பிள்ளையார் திரு அவதா

- ரம்செய்தார்.' அவம்-ஒரு பயனும் இல்லாமல் வீணாக உள்ள செயல் களை: ஒருமை பன்மை மயக்கம். பெருக்கும்-பெருகச் செய் யும், புல்-புன்மையான அறிவின்-அறிவைப் பெற்ற: "சிற்ற றிவைப் பெற்ற" என்றபடி, அமண்-சமண சமயம், முதலாம்முதலாக இருக்கும். பரசமய-சைவசமயம் அல்லாத வேறு சமயமாகிய, ப், சந்தி. பவம்பாவங்களை ஒருமை பன்மை மயக்கம். பெருக்கும்.பெருக்கி வரும். புரை-குற்றத்தைப் பெற்ற. நெறிகள்-சமய வழிகள். பாழ்பட-பாழாகிப் போக. நல்-நல்ல. ஊழிதொறும்-ஒவ்வோர் ஊழிக் காலத்திலும். ஊழிக்காலம்-சர்வபிரளய காலம். தவம்-தவசிகள் தவத்தை. பெருக்கும்.பெருகச் செய்யும். சண்பையில்-சண்பையாகிய

பெ-10.3