பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 47

ஆரண கும்பங்களை ஒருமை பான்மை மயக்கம், நிரைப் பார்-வரிசை வரிசையாக வைப்பார்கள் ஒருமை பன்மை மயக்கம்,

பின்பு உள்ள 38-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தச் சீகாழியில் வாழும் மக்கள் அந்தணர்களுக்குச் சிவப்பாக விளங்கும் தங்கக் காசுகள் முதலாக உள்ள பல -பண்டங்களை நீரோடு கட்டித் தானமாகிய நல்ல காரியத் தைப் புரிவார்கள்; நம்பராகிய பரமபுரீசருக்கு அடியவர்கள் திருவமுது புரிந்தருளும் பொருட்டு நல்ல ஆறுசுவைகளைப் பெற்ற உணவை வழங்குவார்கள் குறுமணம் கமழும் நறு நாற்றத்தைப் பெற்ற மாலைகளை வண்டுகளோடு கட்டு வார்கள் ; வேப்பிலை முதலாக உள்ள காப்பு நெடுங்காலம் இருக்கும் செயலைப் புரிவார்கள், பாடல் வருமாறு:

செம்பொன்முத லான பல தானவினை செய்வார்; நம்பர் அடி யார்.அமுது செய்யகலம் உய்ப்பார்: வம்பலர் கறுங்தொடையல் வண்டொடு

தொடுப்பார்; கிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.'

செம்-அந்தச் சீகாழியில் வாழும் மக்கள் அந்தணர் களுக்குச் சிவப்பாக விளங்கும். பொன்-தங்கக் காசுகள்: ஆகுபெயர். முதலான-முதலாக உள்ள. பல தான-பல பண் டங்களை நீரோடு கட்டித் தானமாகிய. வினை-நல்ல செயலை, செய்வார்.புரிவார்கள்; ஒருமை பன்மை மயக்கம். நம்பர்-தமமுடைய அடியவர்களுக்குப் பல வகையான தம்பிக்கைகளை உண்டாக்குபவராகிய பிரமபுரீசருக்கு. அந்த நம்பிக்கைகள் இன்ன என்பதை வேறு ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க அடியார்-அடியவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அமுது செய்ய-திருவமுது புரிந் தருளும் பொருட்டு. நலம்-நல்ல ஆறு சுவைகளைப் பெற்ற உணவை. ஆறு சுவைகளாவன: தித்திப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, காரம், கசப்பு என்பவை. உய்ப்பார்-வழங்கு