பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பெரிய புராண விளக்கம்-1ே

வார்கள்: ஒருமை பன்மை மயக்கம். வம்பு-நறுமண ம். அலர்-கமழும். நறும்-நறுநாற்றத்தைப் பெற்ற தொடையல் -கட்டிய மாலைகளை; ஒருமை பன்மை மயக்கம், வண் டொடு-அவற்றின் மேல் மொய்க்கும் வண்டுகளோடு: ஒருமை பன்மை மயக்கம். தொடுப்பார்-தொடுப்பர்ர்கள்: ஒருமை பன்மை மயக்கம். நிம்பம்-வேப்பிலை. முதலான முதலாக உள்ள. கடி-காப்புப் பொருள்களை. வெண் சிறு கடுகுகளையும் சேர்க்க. நீடு-நெடுங்காலம் இருக்கும். வினைசெயலை. செய்வார் - புரிவார்கள்: ஒருமை பன்மை மயக்கம். -

பின்பு வரும் 39-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அந்தச் சீகாழியில் வாழும் அந்தணர்கள் வெண் சிறு கடுகுகளோடு பலவற்றை நெருப்பில் இட்டதனால் உண் டாகிய புகையினாலும், நெய்யையும் நறுமணம் கமழும் அகிற்கட்டைகளையும் தீயில் இட்டுப் புகைத்ததனால் எழுந்த நிரம்பியுள்ள புகையினாலும், அந்தணர்கள் வெப்பமாக உள்ள ஒளபாசனத் தீயில் பெய்யும் புத்துருக்கு நெய், சமித்துக்கள் முதலிய ஆகுதிகளால் உண்டாகிய மேலான புகையினாலும், தெய்வத் தன்மையினுடைய நறுமணம் கமழுமாறு தங்களுக்குக் கைவரும் தாங்கள் புரியும் தொழில்

களைப் பயன் விளையுமாறு புரிவார்கள். பாடல் வருமாறு :

ஐயவி யுடன் பல அமைத்தபுகை பாலும் கெய்யகில் கறும் குறை கிறைத்தபுகை பாலும், வெய்யதழல் ஆகுதிவி ழுப்புகையி னாலும், தெய்வமணம் நாறவரு செய்தொழில் விளைப்யார்."

ஐயவியுடன்-அந்தச் சீகாழியில் வாழும் அந்தணர்கள் வெண் சிறு கடுகுகளோடு; ஒருமை பன்மை மயக்கம். பலவேறு பல பொருள்களை. அவையாவன: சாம்பிராணி, மட்டிப் பால், குங்குவியம் முதலியவை. அமைத்த-நெருப்பில் பொருந்து மாறு இட்டதனால் எழுந்த புகையாலும்-புகை யினாலும். நெய்-பசு மாட்டின் நெய்யையும். அகில்-அகிற்.