பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 49

கட்டைகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நறும்-நறு மணம் கமழும். குறை-வெட்டிய துண்டுகளையும்; ஒருமை பன்மை மயக்கம். நிறைத்த-தீயில் இட்டதனால் எழுந்து நிரம்பிய புகையாலும்-புகையினாலும். வெய்ய-வெப்பமாக உள்ள. தழல்-அந்தணர்கள் புரியும் ஒளபாசனத் தீயில் பெய்த. ஆகுதி-பசு மாட்டின நெய், அரசங்குச்சிகளாகிய சமித்துக்கள் முதலிய ஆகுதிகளால் எழுந்த விழு-மேலான. ப்: சந்தி. புகையினாலும்-புகையாலும். தெய்வ-தெயவத் தன்மையைப் பெற்ற மணம்-நறுமணம். நாற-கமழுமாறு. வரு-தங்களுக்குக் ைக வ ரு ம். செய்-தாங்கள் புரியும். தொழில்-ஈதல், ஏற்றல், வேட்டல், வேட்பித்தல், மணம் புரிதல், மணம் புரிவித்தல் என்ற ஆறு தொழில்களை, ஒருமை பன்மை மயக்கம். விளைப்பார்-அந்த அந்தணர்கள் பயனை விளையுமாறு புரிவார்கள்; ஒருமை பன்மை மயக்கம். பின்பு வரும் 40-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: 'அந்தச் சீகாழியில் வாழும் அந்தணர்கள் அத்தகைய வாகிய தாங்கள் புரியும் பல தொழில்களை அன்றைத் தினம் முதலாக தேவலோகத்தில் வாழும் தேவர்களினுடைய தலைவனாகிய பிரமபுரீசன் வழங்கிய திருவருளினுடைய பெருமையை எடுத்துச் சொல்லும் நல்ல பண்பு அடைய பரிசுத்தமாக உள்ள அழகிய பெருமையைப் பெற்ற இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களாகிய தொடர்ச்சியாக அமைந்த செய்யுள் நடையைப் பெற்ற சாத்திரங்களில் அமைந்த விதிப்படி பத்துத் தினங்களிலும் பயன் விளையுமாறு அந்த அந்தணர்கள் புரிந்தார்கள். பாடல் வருமாறு:

ஆயபல செய்தொழில்கள் அன்றுமுதல் விண்ணோர் காயகன் அருட்பெருமை கூறும்கலம் எய்தத் தூயதிரு மாமறை தொடர்ந்தகடை நூலின் மேயவிதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.' ஆய-அந்தச் சீகாழியில் வாழும் அந்தணர்கள் அத் தகையவாகிய, செய்-தாங்கள் புரியும். தொழில்கள்.மேலே

பெ-10-4