பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

舒0 பெரிய புராண விளக்கம்-10

கூறிய அறு வகைத் தொழில்களை ஒருமை பன்மை மயக் கம். அன்று-அன்றைத்தினம். முதல்-முதலாக, விண்ணோர்தேவலோகத்தில் வாழும் தேவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நாயகன்-தலைவனாகிய பிரமபுரீசன். பிரமபுரி-சீகாழி, அருள்-வ ழ ங் கி ய திருவருளினுடைய. பெருமை-பெருமையை கூறும் எடுத்துச் சொல்லும். நவம்நல்ல பண்பு. எய்த-தங்களை அடையத்:சந்தி. தாய-பரிசுத்த மாக உள்ள திரு-அழகிய மா-பெருமையைப் பெற்ற. மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர் வன வேதம் என்னும் நான்கு வேதங்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். தொடர்ந்த-தொடர்ச்சியாக அமைந்த. நடைசெய்யுளின் நடையைப் பெற்ற நூலின்-சாத்திரங் களில்; ஒருமை பன்மை மயக்கம். மேய-அமைந்துள்ள. விதி. வி தி ப் ட டி. ஐயிருதினத்தினும்-ஆண் குழந்தையாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவவதாரம் செய் தருளிய நாளிலிருந்து பத்துத் தினங்களிலும்; தினத்தினும்: ஒருமை பன்மை மயக்கம். விளைத்தார்-பயன் விளையுமாறு அந்த அந்தணர்கள் புரிந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பின்பு உள்ள 41-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

கோழியில் வாழும் வேதியராகிய சிவபாத இருதயர் தமக்கு ஆண் குழந்தையாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயன்ர்ருக்குத திருநாமத்தை வைக்கும் சடங்கினுடைய வனப்பை புண்ணியாஹவாசன நா வரி ல் பெறுமாறு நிலைத்து நிற்கச் செய்து பாதுகாப்பைச் செய்யும் உதய சூரியனைப் போலத் தோற்றப் பொலிவோடு விளங்கும் தலைவனாகிய திருஞான சம்பந்த மூர்த்தியை செந்தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும் ஒப்பற்ற முதற் குழந்தை யாகிய பிரமதேவன் என்று கூறுமாறு அந்த ஆண் குழந்தை யைப் பரிசுத்தமாக உள்ள மணிகளை வரிசையாகக் கட்டி அலங்காரம் புரிந்த தொட்டிலில் வீற்றிருக்குமாறு அந்தச் சிவபாத இருதயர் புரிந்தார். பாடல் வருமாறு: }