பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 5型

நாமகர ணத்தழகு நாள் பெற நிறுத்திச் சேமஉத யப்பரிதி யில் திகழ் பிரானைத் தாமரை மிசைத்தனி முதற்குழவி என்னத் - தூமணி கிரைத்தணிசெய் தொட்டில் அமர்வித்தார்.' நாம கரணத்து-சீகாழியில் வாழும் வேதியராகிய சிவ பாத இருதயர் தமக்கு ஆண் குழந்தையாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்குத் திருநாமத்தை வைக்கும் மங்கலச் சடங்கினுடைய, அழகு-வனப்பை, நாள்-புண்ணியா ஹவாசனம் செய்யும் தினத்தில். பெற-பெறுமாறு. நிறுத்திநிலைத்து நிற்கச் செய்து; திருஞான சம்பந்த மூர்த்தி என்னும் திருநாமத்தை நிலைத்து நிற்கச் செய்து. ச்: சந்தி. சேம-பாதுகாப்பைச் செய்யும். உதயப் பரிதியில்-உதய சூரியனைப் போல். திகழ்-தோற்றப் பொலிவோடு விளங் கும். பிரானை-தலைவனாகிய திருஞான சம்பந்த மூர்த் தியை. த், சந்தி. தாமரை மிசை-செந்தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும். த்: சந்தி. தனி-ஒப்பற்ற, முதல்-முதல் தொழி லாகிய படைப்பைப் புரிகின்ற. குழவி-திருமாலினுடைய ஆண் குழந்தையாகிய பிரமதேவன். என்ன-என்று கூறு மாறு. த்: சந்தி. தூ-பரிசுத்தமாக உள்ள, மணி-மாணிக்கங் களை; ஒருமை பன்மை மயக்கம். "அடிக்கும் சிறிய மணி களை' எனலும் ஆம். நிரைத்து-வரிசையாக் மேலே கட்டித் தொங்க விட்டு. அணி செய்-மலர்மாலைகளால் அலங்காரம் செய்த தொட்டில்-ஒரு தொட்டிவில். அமர்வித்தார்.அந்த ஆண் குழந்தையை அந்தச் சிவபாத இருதயர் வீற்றிருக்கு மாறு புரிந்தார்.

பின்பு வரும் 42-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: - 'பெருமையைப் பெற்ற இமய மலை அரசன் ஈன்றெடுத்த பூங்கொடியைப் போன்றவளாகிய பெரியநாயகி அம்மை விரும்பும் தன்னுடைய கொங்கைகளிலிருந்து கறந்த பாலைப் பொருள் அறிவதற்கு அருமையாக உள்ள வேதங்களினால் கூறப் பெற்ற சிவஞான்த்தை அந்தப் பாலோடு குழைத்து வழங்க அந்தப் பாலைத் திருவமுது செய்தருளுவாராகிய