பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெரிய புராண விளக்கம்-10,

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை ஈன்று அளித்த வேதியப் பெண்மணியாராகிய பகவதியார் பரமேசுவர ராதிய பிரமபுரீசருடைய திருவடிகளை வாழ்த்தி வணங்கும் பக்தியையே தம்முடைய அழகிய கொங்கைளிலிருந்து கறந்து அந்த ஆண் குழந்தைக்குத் திருவமுது புரிந்தளுருமாறு: செய்தார். பாடல் வருமாறு:

பெருமலை பயந்தகொடி பேணுமுலை யின்பால் அருமறை குழைத்தமுது செய்தருளு வாரைத் தருமறைவி யார்பரமர் தாள்பரவும் அன்பே இருமுன்ல சுரந்தமுது செய்தருளு வித்தார்.' பெரு-பெருமையைப் பெற்ற, மலை-இமயமலை அரசன்: திணை மயக்கம். பயந்த-ஈன்றெடுத்த கொடிபூங்கொடியைப் போன்றவளாகிய பெரிய நாயகி அம்மை; உவம ஆகுபெயர். பேணும்-விரும்பும். முலையின் பால்கொங்கைகளிலிருந்து ஒரு பொற் கிண்ணத்தில் للاسrg16:0iتهوي கறந்த பாலை. முலை: ஒருமை பன்மை மயக்கம். அருபொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதே வண வேதம் என்னும் நான்கு வேதங்களில் கூறப் பெற்ற: மை ப்ன்மை மயக்கம் குழைத்து-சிவஞானத்தை அந்தப் விலோடு குழைத்து வழங்க. அமுது செய்தருளுவாரைதிருவமுது செய்தருளுபவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் என்னும் ஆண் குழந்தையை. த்: சந்தி. தருஈன்றளித்த: இறைவியார்-வேதியப் பெண்மனியாராகிய, பகவதியார். பரிம-பரமேசுவரராகிய பிரமபுரீசருடைய, பிரமபுரி-சீகாழி. தாள்-திருவடிகளை ஒருமை பன்மை மயக் கம். பரவும்-வாழ்த்தி வணங்கும். அன்பே-பக்தியையே. திரு.தம்முடைய அழகிய, முலை-கொங்கைகளிலிருந்துல் ஒருமை பன்மை ஆயக்கம், சுரந்து-ஒரு பொற் கிண்ணத்தில் கறந்து. அமுதி செய்தருளுவித்தார்-அந்தச் சிவபாக இருதயர் அந்த ஆன் குழந்தைக்கு அந்தப் பாலைத் திருவமுது புரிந்தருளுமாறு செய்தார்.